சரத்குமாருக்காக ரஜினி சொன்ன அட்டகாசமான கதை… படமா வந்திருந்தா தாறுமாறா இருந்திருக்கும்…

by Arun Prasad |   ( Updated:2022-11-28 09:22:47  )
Rajinikanth and Sarathkumar
X

Rajinikanth and Sarathkumar

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் என்று அறியப்படும் சரத்குமார், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1986 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “சமஜம்லோ ஸ்த்ரீ” என்ற திரைப்படத்தில்தான் சரத்குமார் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கினார்.

Sarathkumar

Sarathkumar

சரத்குமாருக்கு நேர்ந்த விபத்து

சரத்குமார் மிகவும் பிரபலமான வில்லன் நடிகராக அறியப்பட்ட பின் பல திரைப்படங்களில் வில்லனாக ஒப்பந்தமானார். இந்த காலகட்டத்தில் மகேஷ் பாபு நடித்த “பாலச்சந்துருடு” என்ற திரைப்படத்தில் சரத்குமார் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு காட்சியில் 60 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார் சரத்குமார். இதனால் அவரது முதுகெழும்பு பாதிக்கப்பட்டிருந்தது.

Sarathkumar

Sarathkumar

இந்த விபத்தை அடுத்து சரத்குமார் பல மாதங்கள் படுத்த படுக்கையானார். அந்த சமயத்தில் பல பத்திரிக்கைகள் “சரத்குமார் இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார். அவரது கேரியர் முடிந்தது” என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் மீண்டும் தனது உடலை மெருகேற்றி கம்பேக் கொடுத்து தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டாராக உயர்ந்தார் சரத்குமார்.

ரஜினிகாந்த்-சரத்குமார்

கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா, ஆதி ஆகியோரின் நடிப்பில், இந்தியாவின் முதல் முழு நீள மோஷன் கேப்சர் திரைப்படமாக வெளிவந்த படம் “கோச்சடையான்”. இத்திரைப்படத்தை ரஜினியின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார்.

Kochadaiyan

Kochadaiyan

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த், தனக்காக ஒரு கதை கூறியதாகவும், அதில் இருவருமே நடிக்க இருந்ததாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் சரத்குமார் கூறியிருந்தார். மேலும் அந்த அட்டகாசமான கதையை அந்த பேட்டியில் சரத்குமார் பகிர்ந்துகொண்டார்.

ரஜினி சொன்ன கதை

அந்த கதையில் சரத்குமார், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். அப்போது ஒரு நாள் துறைமுகத்தில் இருந்து தாவுத் இப்ரஹிம் மாதிரியான பயங்கரவாதி ஒருவர், சென்னை நகரத்திற்குள் நுழைகிறார். இதனை சரத்குமார் பார்த்துவிடுகிறார்.

அதன் பின் போலீஸ் கான்ஃப்ரென்ஸ் நடக்கும் ஒரு அறைக்குள் சரத்குமார் நுழைகிறார். “இன்னும் சில நாட்களில் நகரத்தில் ஓரு பெரிய பிரச்சனை உருவாக வாய்ப்பிருக்கிறது. எச்சரிக்கையாக இருங்கள்” என கூறிவிட்டு வெளியே சென்றுவிடுகிறார். அப்போது அங்கிருக்கும் சில காவலர்கள் உயர் அதிகாரியை பார்த்து “இவர் யார்?” என கேட்கிறார்கள். அதற்கு அவர் “இவர்தான் அசிஸ்டென்ட் கம்மிஷ்னர் சரத். ஆனால் இப்போது சஸ்பெண்டில் இருக்கிறார்” என கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சர்ச்சை நடிகையை ரிஸ்க் எடுத்து நடிக்க வைக்கும் ரஜினி பட இயக்குனர்… கொஞ்சம் ஓவராத்தான் போகுது…

Rajinikanth and Sarathkumar

Rajinikanth and Sarathkumar

அடுத்த சில நாட்களில் சென்னையில் வெடிகுண்டு வெடிக்கிறது. இந்த சம்பவத்தை விசாரிக்க உயர் அதிகாரியான ரஜினிகாந்த்தை சென்னைக்கு அனுப்புகிறார்கள். அங்கே வரும் ரஜினி, அசிஸ்டென்ட் கமிஷ்னர் சரத் எங்கே?” என கேட்கிறார். அதற்கு அவர்கள் சில காரணங்களுக்காக சஸ்பென்டில் இருப்பதாக கூறுகிறார்கள். உடனே சரத்குமாரை அழைக்க சொல்கிறார் ரஜினிகாந்த். சரத்தும் தானும் இணைந்து செயல்பட்டால்தான் இதில் வெற்றிபெற முடியும் என உயர் அதிகாரியிடம் பேசுகிறார். உயர் அதிகாரி அதற்கு சம்மதிக்க இருவரும் இணைந்து இந்த குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கிறார்கள். இது தான் ரஜினி, சரத்குமாருக்கு சொன்ன கதை.

இந்த படத்தை ரஜினிகாந்த், சரத்குமார் ஆகியோரை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்குவதாக முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் சில காரணங்களால் இந்த புராஜக்ட் ட்ராப் ஆகிவிட்டதாம்.

Next Story