Categories: Cinema News latest news

பொன்னியின் செல்வனில் விஜயகாந்த்…பல வருடங்களுக்கு பின் ரஜினி சொன்ன சீக்ரெட்….

இயக்குனர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடெக்‌ஷன் இணைந்து அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.

பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரும் எடுக்க நினைத்து எடுக்க முடியாமல் போனது. தற்போது மணிரத்னம் இதை சாத்தியமாக்கியுள்ளார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்ய ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தி டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினி பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்தார். பொன்னியின் செல்வன் நாவலை நான் கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன். அந்த கதையில் இடம் பெற்றிருந்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரம் என்னை கவர்ந்தது. 90களில் இப்படம் உருவாகியிருந்தால், ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என நான் நினைத்தேன்’ என தெரிவித்தார். இதைக்கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா