தலைவர் 170 படத்தை வேகமாக முடித்து வரும் ரஜினிகாந்த் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த படத்திற்காக திரைக்கதை வசனம் எழுதும் வேலைகளை தொடங்கியவர் ஆறு மாத காலம் சோசியல் மீடியா பக்கமே வரமாட்டேன் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
இதையும் படிங்க: விஜய்க்கு பேசவே தெரியல!.. எப்படியாவது பேச வைங்க ப்ளீஸ்… பிரபலத்திடம் புலம்பிய எஸ்.ஏ.சி..
லோகேஷ் கனகராஜ் போல அவரது நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் தானும் சோசியல் மீடியா பக்கம் சில மாதங்கள் வரப்போவதில்லை என அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு பதிலடி தரும் வகையில் ரத்னகுமார் எவ்வளவுதான் உயரப் பறந்தாலும் பசித்தால் கீழே இறங்கி வந்து தான் ஆக வேண்டும் என பேசி நடிகர் ரஜினிகாந்தை தாக்கியுள்ளார் என விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
இதையும் படிங்க: அடுத்த ஆண்டு ஆண்டவர் ஆண்டு தான் போல.. இந்தியன் 2, இந்தியன் 3 எப்போ ரிலீஸ் தெரியுமா?
இந்த விவகாரம் நடிகர் ரஜினிகாந்த் காது வரைக்கும் சென்ற நிலையில், லோகேஷ் கனகராஜின் படத்தையே டிராப் செய்யும் முடிவில் ரஜினி ஆலோசனை செய்து வருவதாக வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், சமரசப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற நிலையில், ரத்ன குமாரை இந்த படத்தில் பணியாற்ற லோகேஷ் கனகராஜ் விடவே கூடாது என்கிற கட்டளையையும் ரஜினிகாந்த் பிறப்பித்து இருப்பதாகவும் லியோ படத்தில் செய்தது போல இரண்டாவது பாதி சொதப்பல் தனது படத்தில் எந்த இடத்திலும் செய்து விடக்கூடாது என்கிற கண்டிஷனயும் ரஜினிகாந்த் லோகேஷிடம் ஸ்ட்ரிட்டாக கூறிவிட்டதாக கூறுகின்றனர்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…