கமலை பார்த்தாவது ரஜினி திருந்தனும்!... இப்பயும் அவருக்கு இது தேவையா?!... விளாசிய பிரபலம்!...

by ramya suresh |
கமலை பார்த்தாவது ரஜினி திருந்தனும்!... இப்பயும் அவருக்கு இது தேவையா?!... விளாசிய பிரபலம்!...
X

#image_title

கமலஹாசனை பார்த்தாவது நடிகர் ரஜினிகாந்த் திருந்த வேண்டும் என்று வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக தற்போது பார்க்கப்பட்டு வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன். நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வரும்போது மிகப் பிரபல நடிகராக இருந்தவர் கமலஹாசன். அதைத்தொடர்ந்து இருவரும் பல திரைப்படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கிறார்கள். தங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லாமல் போட்டியும் இல்லாமல் இருந்து வரும் நடிகர்கள் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும்.

இதனை பலமுறை அவர்கள் இருவரும் பொதுவெளியில் கூறியிருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் இருவர்களின் பாதையும் வெவ்வேறாக பிரிந்த நிலையில் அவரவர்களுக்கென்று தனி தனி ஸ்டைலில் படங்களில் நடிக்க தொடங்கினார்கள். நடிகர் ரஜினிகாந்த் முழுக்க முழுக்க கமர்சியல் திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் சர்ஜரியா செஞ்சிருக்கேன்… இங்க தொட்டு பாருங்க… ஓபனா பேசிட்டாரே நயன்!..

ஆனால் கமலஹாசனுக்கு புது புது விஷயங்களை கையாளுவது என்பது மிகவும் பிடிக்கும் அதனால் தனது திரைப்படங்களில் புதுமை இருக்க வேண்டும் என்று அதிக முயற்சி எடுத்து நடிக்க தொடங்கினார். அது மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் இடையில் சினிமாவை விட்டு மக்கள் நீதி மையம் என்கின்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார். அவர் சினிமாவை விட்டாலும் சினிமா அவரை விடாது என்ற பெயரில் விக்ரம் என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நடிகர் கமலஹாசனின் பிறந்தநாள் முடிவடைந்தது. 70 வயதான கமலஹாசன் தற்போது ஏஐ டெக்னாலஜியை கற்றுக் கொள்வதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனக்கு உலகநாயகன் என்கின்ற பட்டம் வேண்டாம் என்று கூறி இரண்டு பக்கத்திற்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். தன்னை கமலஹாசன் என்றும், கமல் என்றும் அழைத்தால் போதும் என்று கூறியிருந்தார். இது அவரின் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதைப்போல கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்தும், தனக்கு தல என்கின்ற பட்டம் வேண்டாம் தன்னை அஜித் அல்லது ஏகே என்று அழைத்தால் போதும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்திருந்த வலைப்பேச்சு பிஸ்மி இது குறித்து பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது : 'இப்பயாவது கமலஹாசன் இப்படி ஒரு முடிவை எடுத்தாரே என்று நினைத்து சந்தோஷப்பட வேண்டும்.

எந்த துறையில் இருப்பவர்களும் தங்கள் பெயருக்கு முன்னாள் அடைமொழியை வைத்துக் கொள்வது கிடையாது. சினிமா நடிகர்களுக்கு மட்டும்தான் இப்படி ஒரு அடைமொழி கொடுக்கப்பட்டு வருகின்றது. இப்படியான அடைமொழி ரசிகர்களிடையே ஒரு வெறித்தனத்தை வளர்க்கின்றது. இது அவர்களுக்கு புரிந்தாலும், நடிகர்கள் அதனை வளர்த்துக் கொண்டும் ரசித்துக் கொண்டும் தான் இருக்கிறார்கள்.

இதனால்தான் நேற்று சினிமாவிற்கு வந்தவர்கள் கூட தனது பெயருக்கு பின்னால் அடைமொழியை வைத்துக் கொண்டு வருகிறார்கள். கமலஹாசனாவது லேட்டாக அறிவித்திருக்கின்றார். ஆனால் ரஜினிகாந்த் எந்த காலத்திலும் தனது அடைமொழியை விட்டுக் கொடுக்க மாட்டார். ரஜினியை பொறுத்தவரையில் முரண்பாடுகள் நிறைந்த ஒரு மனிதர். பணம் இருந்தால் நிம்மதி இல்லை என்று பொதுவெளியில் கூறுவார்.

இதையும் படிங்க: மே 1ஆம் தேதிக்கு இவ்வளவு டிமாண்ட்டா?!… லிஸ்டில் இணைந்த சூப்பர் ஸ்டார்!… ஆட்டம் சூடு பிடிக்குது!…

ஆனால் இந்த பக்கம் அந்த நடிகர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் அப்போது எனக்கும் அடுத்த படத்திற்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் செய்வார். பல இடங்களில் இன்று எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் இருக்கின்றது நாளை வேறு ஒருவருக்கு போகலாம் என்று கூறுவார். ஆனால் அவரது படங்கள் எதுவாக இருந்தாலும் ஓபனிங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று டைட்டிலுடன் தான் தொடங்கும். இதனால் எந்த காலத்திலும் அந்த பட்டத்தை அவர் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்' என அந்த பேட்டியில் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார்.

Next Story