ஆக்சன் கிங்.. கலெக்ஷன் கிங்.. டயலாக் டெலிவரி கிங்!.. ரஜினி யாரை சொல்லியிருக்கார் பாருங்க!...
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்திற்கு பின் மிகவும் பிஸியான நடிகராக மாறிவிட்டார். லால் சலாம் படம் வெளியாகி வரவேற்பை பெறாமல் போனது. அதன்பின் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்தார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைக்கா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் ஒரு பேன் இண்டியா படமாக வெளியாகவுள்ளது. எனவே, ஹிந்தியிலிருந்து அமிதாப்பச்சன், மலையாளத்திலிருந்து பஹத் பாசில், தெலுங்கிலிருந்து ராணா என நடிகர்களை இறக்கியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ரஜினி மகளா இது? இவ்ளோ குண்டாயிட்டாங்க.. சத்தியமா நம்ப முடியல
எனவே, இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், அதைவிட அதிகப்படியான எதிர்பார்ப்பு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி இப்போது நடித்து வரும் கூலி படத்தின் மீது இருக்கிறது. இந்த படமும் ஒரு பேன் இண்டியா படமாகவே வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல இடங்களிலும் நடந்து வருகிறது.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் பாலையாவுக்கு வாழ்த்து சொல்லி ரஜினி டிவிட் செய்திருக்கிறார். அதாவது பாலகிருஷ்ணா சினிமாவில் நடிக்க துவங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டது. தெலுங்கில் பரபரப்பாக ஆக்ஷன் படங்களில் நடித்து வருபவர் பாலையா. இவரை ஆந்திர ரசிகர்கள் ஜெய் பாலையா என அழைப்பார்கள்.
இவரின் படங்களில் பன்ச் வசனங்கள் அனல் பறக்கும். அவர் பேசுவது பன்ச் வசனங்களை யாராலும் பேசவே முடியாது. அதற்காகவே தனியாக ரூம் போட்டு யோசித்து இயக்குனர்கள் வசனம் எழுதுவாரக்ள். பாலையாவின் ரசிகர்களும் அதை அதிகம் ரசிப்பார்கள். அதேபோல், ஆக்ஷன் காட்சிகள் அதகளமாக இருக்கும்.
இந்நிலையில்தான் ரஜினி டிவிட்டரில் ‘ஆக்சன் கிங், கலெக்ஷன் கிங், டயலாக் டெலிவரி கிங் என் அன்பு சகோதரர் பாலையா சினிமா உலகில் 50 வருடங்களை முடித்திவிட்டு இன்னும் போய்கொண்டிருக்கிறார். இது ஒரு பெரிய சாதனை. அவருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.. அவருக்கு அமைதியான மனநிலையும், நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் அவரின் வாழ்க்கையில் அமைய வாழ்த்துகிறேன்’ என பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: வேட்டையனுக்கு பயந்து கோட்டைய விட்டு ஓடலாமா சூர்யா?!.. கேப்பில் கெடாவெட்டும் பிரபலம்!..