இதை எனக்கு கொடுங்க!.. என் வாழ்க்கை இனிமே மாறும்!. ரஜினி ஆசையாக கேட்டது எதை தெரியுமா?...

by Akhilan |   ( Updated:2024-04-10 04:47:16  )
இதை எனக்கு கொடுங்க!.. என் வாழ்க்கை இனிமே மாறும்!. ரஜினி ஆசையாக கேட்டது எதை தெரியுமா?...
X

Rajinikanth: சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் இப்போது ரொம்ப அமைதியாக இருக்கிறார். ஆனால் ஒரு காலத்தில் அவர் ரொம்பவே கலக்கத்தில் இருந்த போது துணைநின்ற ரெஜினா வின்சென்ட்டிடம் அவர் தொடர்ந்து ஒரு ஓவியத்தினை கேட்டு வாங்கிய சம்பவம் நடந்ததாம்.

ரஜினிகாந்த் உடல் சோர்வால் மன கோளாறு ஏற்பட்டு இருந்தார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ரெஜினா வின்சென்ட். இவர் வீட்டில் தான் தர்மத்தின் தலைவன் திரைப்படம் படமாக்கப்பட்டது. அதில் இருந்து இருவருக்கும் ஒரு அம்மா-மகன் இணைப்பு இருந்ததாம். அவர் உடல் பிரச்னையால் ரெஜினா அம்மா வீட்டில் தங்கி இருந்தார் ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…

ஒருகட்டத்தில் நிறைய சிகிச்சை, ஓய்வுக்கு பின்னர் ரஜினிகாந்த் சரியானார். அவரிடம் நீ திருமணம் செய்து கொள் என்கிறார் ரெஜினா. அதன்பின்னர், ரஜினிகாந்த் எப்போதும் போல தன் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். தன் இருப்பிடத்திற்கு போனாலும் ரெஜினா அம்மாவை தேடி வராமல் இருப்பதில்லை.

அதிலும், குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் உள்ளிட்ட நாள்களில் வந்து ரெஜினா அம்மாவிடம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வாராம். இப்படி ஒருநாள் தீபாவளிக்கு ஆசீர்வாதம் வாங்க சென்று இருக்கிறார். எப்போதும் வீட்டினை சுற்றி ரெஜினா அம்மா வரைந்த ஓவியங்கள் இருக்குமாம்.

இதையும் படிங்க: என்ன அண்ணே இது… ஃபகத் பாசிலுக்கு ஓவர் பில்டப் கொடுத்தது வீணா போச்சே.. வேட்டையனில் என்ன கேரக்டர் தெரியுமா?

அதில், ரஜினி இயேசு படத்தினை கேட்டாராம். அதற்குமுன் பலமுறை கேட்ட போது மறுத்த ரெஜினா அம்மா இந்த முறை கேட்தும் மனம் கேட்காமல் கொடுத்துவிட்டாராம். ரஜினி கேட்ட ஓவியத்தின் போட்டோ பிரதியைக் கொடுத்தபோது, "இந்த நிமிடத்திலிருந்து என் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும்னு நினைக்கிறேன்" என்றாராம்.

வாழ்க்கை என்ன மாறினாலும் நேரில் என்னை ரெஜினாவை அம்மா என்றும், மற்றவர்களிடம் மம்மி என்றும் அவரை பற்றிக் கூறுவதில் ரஜினியிடம் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story