நடுராத்திரி கமலை தேடிச் சென்ற ரஜினிகாந்த்... நான் கால்ல விழுந்துருவேன் என உருகிய தருணம்

Rajini_Kamal
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் தனது போட்டியாளர் என்றுக்கூட பார்க்காமல் கமலை நேரில் சந்தித்து உங்க காலில் கூட விழுந்து விடுவேன் என்று கூறிய சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Aboorva sagothararkal
தமிழ் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் வந்தவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் இவர் சினிமாவிற்கு வரும்போது பெரிய நட்சத்திர அந்தஸ்த்தில் இருந்தவர் கமல்ஹாசன். அவருக்கும் இவருக்கும் போட்டியா எனக் கேட்டால் அந்த நிலையை எட்டிப்பிடிக்க ரஜினிகாந்த் போராடியது அதிகம் தான்.
ஒவ்வொரு படத்திலும் நடிப்பாலே ரசிகர்களை கவர்ந்து வந்தார். ஆனால் கமலோ டெக்னாலஜியில் அசுர வளர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு படத்துக்கும் அவர் போடும் கெட்டப்பை பார்த்து வாய் பிளந்தவர்கள் பலர் என்றால் அந்த லிஸ்ட்டில் ரஜினியும் இருந்து இருக்கிறார். கமலின் பல படங்களில் அவர் நடிப்பை பார்த்து பிரமித்தவர் ரஜினிகாந்த். இதை பல பேட்டிகளில் அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். நேரடியாக கமலிடம் இதை சொல்லியும் இருக்கிறார் என பல தகவல்கள் இணையத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க: துணிவு பார்த்து பயந்து ஓடுறவரு நம்ம ஆளு விஜய்!.. இந்த நேரத்துல இது தேவையா?.. பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!..
அப்படி ஒருமுறை கமலின் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தினை ரஜினி இரவு 11 மணிக்கு பார்த்து இருக்கிறார். முழு படத்தினையும் பார்த்து விட்டு வெளிவந்தவர் உடனே கமலை பார்க்க வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார். சார் மணி இப்போ 2 ஆச்சு எப்படி என உதவியாளர் கேட்டாலும் விடாப்பிடியாக இருந்தாராம். சரியென கமலிடம் ரஜினிகாந்தினை கூட்டி சென்றனர்.

Rajini_Kamal
அவரை கையை பிடித்துக்கொண்டு வாழ்த்திய ரஜினிகாந்த் நீங்க என்னை விட வயசில சின்னவரு இல்லை உங்க காலில் விழுந்து விடுவேன் எனக் கூறினாராம். இப்போது இருக்கும் மார்டன் டெக்னாலஜி இல்லாத காலத்தில் கமல் செய்த அந்த படம் ரஜினியின் ஃபேவரிட் படம் எனக் கூறப்படுகிறது.