கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பாபநாசம்”. இத்திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மலையாளத்தில் “த்ரிஷ்யம்” என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம்.
இத்திரைப்படம் மிகச்சிறந்த திரில்லர் திரைப்படமாக அமைந்தது. ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு அமோக வரவேற்பை அளித்திருந்தனர். கமல்ஹாசன் கேரியரில் மிகவும் முக்கியமான வெற்றித்திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது.
“பாபநாசம்” திரைப்படத்தை சுரேஷ் பாலாஜி, ராஜ்குமார் சேதுபதி போன்றோர் இணைந்து தயாரித்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
ரீமேக் செய்ய ஆசைப்பட்ட ரஜினி…
அதாவது மலையாளத்தில் “த்ரிஷ்யம்” திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், கலைப்புலி எஸ்.தாணுவை தொடர்புகொண்டு, “த்ரிஷ்யம் படத்தை நாம் ரீமேக் செய்யலாம்” என கூறியிருக்கிறார். அதற்கு எஸ்.தாணு, “அந்த படத்தின் ரீமேக் உரிமையை ஏற்கனவே தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி பெற்றுவிட்டார். அவர் அத்திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என விருப்பப்படுகிறார்” என கூறினாராம்.
பா.ரஞ்சித் கூறிய கதை…
அதன் பிறகுதான் பா.ரஞ்சித் கலைப்புலி எஸ்.தாணுவிடன் “கபாலி” திரைப்படத்தின் கதையை கொண்டுவந்திருக்கிறார். பா.ரஞ்சித் சொன்ன ஒன் லைன் மிகவும் பிடித்துப்போக, உடனே ரஜினிகாந்திடம் “பா.ரஞ்சித் கூறிய ஒன் லைன் நன்றாக இருக்கிறது” என கூற, மேற்படி சில நாட்கள் கழித்து பா.ரஞ்சித் முழு கதையையும் ரஜினிகாந்த் மற்றும் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோரிடமும் கூறினார்.
பா.ரஞ்சித் கூறிய கதை ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்துப்போக பா.ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டினாராம். “கதை சூப்பரா இருக்கு. நிச்சயம் நம்ம படம் பண்ணலாம்” என கூறினாராம். இவ்வாறுதான் “கபாலி” திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சிக்கும் முருகதாஸுக்கும் நடந்த சண்டை… கைமாறிப்போன விஜய் பட புராஜெக்ட்…
Lubber Pandhu: கடந்த…
Sun serials:…
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…