Connect with us

Cinema News

பாபா படத்தின் ரி-ரிலீஸிலும் சொதப்பல்கள்… 7 வேண்டாம் 5 போதுமாம்.. மாற்றப்பட்ட புது கிளைமேக்ஸ் என்ன?

ரஜினியின் பாபா திரைப்படம் இன்று ரிலீஸாகி இருக்கிறது. இப்படத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கிளைமேக்ஸிலும் சில காட்சிகளை சேர்த்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

baba

ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி திரைப்படம் தான் பாபா. இந்த திரைப்படத்திற்கு ரஜினியே திரைக்கதை எழுதி இருந்தார். சுரேஷ் கிருஷ்ணா படத்தினை இயக்கினார். ரஜினி தனது நிறுவனத்தின் சார்பில் தயாரித்த முதல் படம். பத்திரிக்கை நிறுவனங்கள் வாரா வாரம் போட்டி போட்டுக்கொண்டு எக்ஸ்கிளூசிவ் என செய்தி கொடுத்து கொண்டிருந்தது.

ஆனால் அப்படியும் பாபா படம் பெரும் தோல்வியை தழுவியது. இது ரஜினிக்கு மிகப்பெரிய வருத்தத்தினை கொடுத்தது. ஒரு கட்டத்தில் விநியோகிஸ்தர்களிடம் வாங்கிய மொத்த பணத்தினை கொடுத்து சமாளித்தார்.

இதையும் படிங்க: இன்னமுமா நம்பிட்டு இருக்காரு!.. பாபா மறுவெளியீட்டுக்கு காரணம் இந்த படம் தான்!.. ரிஸ்க் எடுக்கும் ரஜினி!..

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு புதுப் பொலிவுடன் மீண்டும் பாபா டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு கலர் கிரேடிங் செய்து வெளியாக உள்ளது. இது புது டெக்னாலஜிக்கு ஏற்றவாறு மட்டுமல்லாமல் மேலும் பல மாற்றங்களும் செய்யப்பட்டு இருக்கிறது.

baba

தற்போது வெளிவந்து இருக்கும் பாபா படத்தில் 7 வரத்திற்கு பதில் 5 வரம் கொடுக்கப்படுகிறது. முதலில் வெளியான பாபா படம் ரஜினிகாந்த் மக்களிடம் செல்வது போல அரசியல் சாயத்துடன் இருக்கும். இந்த படத்தில் மறுஜென்மத்தில் நீ பிறந்து உன் கடமையை சரியாக செய்து முடி, நானே உன்னை அழைத்து கொள்கிறேன் என பாபா கூறுவது போல அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top