பாலிவுட்டை நோக்கி நகரும் ரஜினி! அடுத்த படத்திற்கான பக்கா ஸ்கெட்ச்.. இதுதான் காரணமா?

Published on: March 7, 2024
rajini
---Advertisement---

Actor Rajini: ரஜினி அடுத்தடுத்து ஏதாவது ஒரு வகையில் ரசிகர்களை உற்சாகத்திலேயே வைத்துக் கொண்டு வருகிறார். 73வயதை எட்டினாலும் இன்னும் தன் ரசிகர்களை தன் பக்கமே இழுத்து வைத்திருக்கிறார். அந்த வகையில் ஏதாவது புதிய புதிய அணுகுமுறைகளை தன் படங்களின் மூலம் கொண்டு வர நினைக்கிறார். ஜெயிலர் என்ற பக்கா ஆக்‌ஷன் படத்தில் ரஜினி செட்டாகுவாரா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் இருந்தது.

ஆனால் அசால்ட்டாக அடுத்த இளம் தலைமுறை நடிகர்களை தூக்கி சாப்பிட்டு விட்டார் அந்தப் படத்தின் மூலம். விக்ரம், கைதி, மாஸ்டர் போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷுடனும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறார். சும்மாவே லோகேஷ் என்றால் ரசிகர்களுக்கு கூஸ் பம்ப் மாதிரி. இதில் ரஜினியும் இணைவது ஒரு பெரிய மாஸை கிரியேட் செய்ய இருப்பதாகவே ரசிகர்கள் உணர்கிறார்கள்.

இதையும் படிங்க: அழகி டூ மஞ்சுமெல் பாய்ஸ் வரை! சின்ன கேரக்டரானாலும் நடிப்பில் துவம்சம் செய்யும் ஜார்ஜ் மரியான்

தற்போது ரஜினி த.ச. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படத்தை லைக்காதான் தயாரிக்கிறது. இதனை அடுத்து லோகேஷுடன் இணையும் அடுத்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு கிடையில் ரஜினியின் 172வது படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் தயாரிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

பாலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்த நதியத்வாலாதான் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க இருக்கிறாராம். இவர் ஹிந்தியில் ஹவுஸ்ஃபுல் என்ற பெயரில் பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர். அதுவும் ஹவுஸ்ஃபுல்1, 2, 3, 4 என நான்கு பாகங்களாக வெளிவர இப்போது மீண்டும் ஹவுஸ்ஃபுல் 5 படத்தையும் தயாரிக்க இருக்கிறாராம்.

இதையும் படிங்க: வசந்தபாலனிடம் கடுப்படித்த அங்காடித் தெரு நடிகர்… அதை சாதகமாக பயன்படுத்தி சாதித்த ஆச்சரியம்!

பொதுவாக ரஜினிக்கும் ஹிந்தியின் மீது கொஞ்சம் ஆர்வம் அதிகம் என கூறிய சித்ரா லட்சுமணன் ரஜினி ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த போது சின்ன சின்ன வேடங்களில் ஹிந்தியிலும் நடித்தவர். அதனாலேயே அவருடைய அடுத்த படத்தை தயாரிக்கும் பணியை நதியத்வாலாவிடம் ஒப்படைத்திருப்பார் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.