‘ஆறிலிருந்து அறுபது வரை’ மெகா ஹிட் படத்தின் கதை இந்த இயக்குனரின் வாழ்க்கை கதையா?.. காலம் கடந்து வெளிவந்த உண்மை!..

Published on: December 2, 2022
rajini_main_cine
---Advertisement---

1979 ஆம் ஆண்டு வெளியான ரஜினி படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ திரைப்படம். இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க பஞ்சு அருணாச்சலம் தயாரித்திருந்தார். இளையராஜாவின் இசையில் இப்படத்தில் அமைந்த பாடல்கள் மெருகூற்றியதாக அமைந்திருக்கும்.

மேலும் இப்படித்தில் ரஜினிக்கு ஜோடியாக படாபட் ஜெயலட்சுமி, நண்பராக சோ.ராமசாமி ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் ஒரு மேஜிக்கே பண்ணியிருப்பர். ரஜினி ஒரு மாஸ் நடிகராக இருந்தாலும் ஒரு சிறந்த நடிகர் என்று சொல்வதற்கு இந்த படம் தான் சிறந்த உதாரணமாகும்.

rajini1_cine
rajini

வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக புத்தியிர் பெற்ற படமும் ஆறிலிருந்து அறுபது வரை திரைப்படம் தான். இளம் வயதில் தந்தையை இழந்த மகன் குடும்ப பாரத்தை 6 வயதிலேயே சுமக்க ஆரம்பித்து தங்கை , தம்பிகளை படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு ஆளாக்க ஒரு கட்டத்தில் உடன் பிறந்தவர்களாலேயே கதையின் நாயகனான ரஜினி புறக்கணிக்கப்படுகிறார்.

மனைவி இறந்த சோகத்திலேயே எழுத்தாளராக பரிணமிக்கப்படுகிறார் ரஜினி. மனைவியின் நியாபகத்திலேயே எழுத்தாளராக நிறைய கதைகள் எழுத அதனால் பேரும் புகழும் சேர பிரிந்த உறவுகள் ரஜினியை தேடி வருகிறார்கள். அந்த நிலையில் நாற்காலியில் அமர்ந்தவாறு உயிர் துறக்கிறார் ரஜினி. இதுதான் இந்த படத்தின் கதை.

rajini2_Cine
rajini

இதையும் படிங்க : பாபா திரைப்படம் மொக்கை ப்ளாப்… வாய் கொழுப்பால் உருவான பிரச்னை… சூப்பர்ஸ்டார் என ரஜினி நிரூபித்த தருணம்…

கதையை அழகாக சித்தரித்திருப்பார் படத்தின் கதாசிரியரான பஞ்சு அருணாச்சலம். இந்த படத்தில் நடக்கிற மாதிரியான சில சம்பவங்கள் ஒரு சிலரின் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம். அந்த வகையில் பஞ்சு அருணாச்சலத்தின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் இணைத்தே தான் அவர் எழுதினாராம்.

rajini3_cine
panju arunachalam

அவர் கதாசிரியர் மட்டுமில்லாமல் சிறந்த பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளை ஒருங்கே வாய்க்கப்பெற்றவர். இந்த படத்திற்கான பாடல்களையும் அவரே தான் எழுதியிருக்கிறார். அவர் இயக்கத்தில் மணமகளே வா, புதுப்பாட்டு, கலிகாலம், தம்பிப் பொண்டாட்டி என்ற நான்கு படங்கள் தான் வெளிவந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.