Cinema News
மீண்டும் ரி-ரிலீஸ் செய்யப்படும் பாபா… ஆச்சரியத்தில் ரஜினி ரசிகர்கள்… சூப்பர் தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாபா படத்தினை ரி-ரிலீஸ் செய்யும் வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் பாபா. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்தில் பணியாற்றி இருந்தார். பாடல் எல்லாமே நல்ல ரீச்சை பெற்றது.
இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார், சுஜாதா, எம்.என்.நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர். அதுவும் இல்லாமல் இப்படத்தில் பிரபுதேவா, நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தனர்.
அப்படத்தில் ரஜினியின் ஆன்மீக பயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பாபா திரைப்படம். சுமார் வெற்றியை பெற்றது. அப்படத்தில் ரஜினி காட்டும் முத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தினை புதிய பொலிவுடன் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு மீண்டும் எடிட்டிங் செய்து வெளியிடும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாம். பாடல்கள் அனைத்தும் புதிதாக ரீமிக்ஸ் செய்யப்பட்டு வேறு ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அடுத்த மாதம் ரஜினியின் பிறந்தநாளுக்கு பாபா ரிரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.