Categories: Cinema History Cinema News latest news

இந்த பாட்டு நல்லா இல்லை… ஒதுக்கிய அஜித்… ஆனா, டபுள் ஓகே சொன்ன ரஜினிகாந்த்!

மனசுக்கேத்த மகாராசா படத்தில் ராமராஜனுக்கு முதன்முதலில் இசையமைப்பாளராக திரைக்கு எண்ட்ரி கொடுத்தவர் தேவா. இதை தொடர்ந்து அவர் இசையமைத்த படம் தான் வைகாசி பொறந்தாச்சு. அன்பாலயா பிரபாகர் வாங்கி கொடுத்த ஒரு டீக்கே 7 பாடல்களை செய்து முடித்தவர். 

இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் திரையில் மின்னிக்கொண்டு இருந்த சமயத்தில் தனக்கென தனி அடையாளத்தினை பிடித்தவர். இவரால் முடியுமா என ரஜினிகாந்த் சந்தேகப்படும் சமயத்தில் கூட கவலையே படாமல் அண்ணாமலை படத்துக்கு சூப்பர்ஹிட் பாடல்களை அமைத்து கொடுத்தவர்.

இதையும் படிங்க: பிரச்சினையை ஊதி ஊதி பெருசாக்கி எப்படியோ ‘ஜெய்லர்’ படத்தை ஓட வச்சுட்டாங்க! அப்போ அதுதான் காரணமா?

இதில் மகிழ்ந்த ரஜினி தேவாவிற்கு தங்க செயினை பரிசாக கொடுத்தாராம். அது மட்டுமல்லாமல் எல்லா படங்களிலுமே வரும் சூப்பர்ஸ்டார் ரஜினி என்ற இண்ட்ரோ தீம் மியூசிக்கை உருவாகியது தேவா தான். இவரால் முடியுமா என்று கேட்ட ரஜினி பெயரை இன்று வரை சொல்ல வைத்த இசையை போட்ட பெருமை இவரையே சேரும்.

தேவாவின் பாடல்கள் எல்லாமே தனி ரகம் தான். பெரும்பாலும் எல்லா தரப்பினருக்குமே இந்த பாடல்கள் பிடிக்கும். அண்ணாமலை வெற்றிக்கு பிறகு அப்போது சினிமாவில் சூப்பர் ஹிட் நாயகர்களாக இருந்த ரஜினி, விஜய், சூர்யா என அனைவருக்குமே இசையமைத்து கொடுத்து வந்தார்.

இதையும் படிங்க : ”வருங்கால சூப்பர்ஸ்டார் நான் தான்” பகிரங்கமாக அறிவித்த அஜித்.. இது புது கதையால இருக்கு!

ஆசை படத்திற்கும் தேவா தான் இசையமைத்து இருந்தார். அப்போது அப்படத்திற்கு தான் ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் இசையமைக்கப்பட்டதாம். ஆனால் அந்த பாட்டு இயக்குனர் வசந்த் மற்றும் அஜித்துக்கும் கூட பிடிக்காமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பாட்டை படத்தில் இருந்து ஒதுக்கிவிட்டனர்.

பின்னர் பாட்ஷா சமயத்தில் இந்த ட்யூனை எதேர்ச்சையாக இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கேட்டு இருக்கிறார். அவருக்கு இந்த பாடல் ரஜினிக்கு செமையாக ஒத்துப்போகும் என தோண உடனே இந்த பாடலை ஓகே செய்துவிட்டாராம். பாடல் ஷூட்டிங்கின் போது ரஜினிக்கும் இந்த பாடல் செம திருப்தியாகவே இருந்ததாக கூறப்படுகிறது.

Published by
Akhilan