Actor Rajini: தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய படங்களினால்தான் இப்போது தமிழ் சினிமாவின் வியாபாரமே நடக்கிறது. ரஜியின் படங்களுக்கு நல்ல ஒரு ஓப்பனிங் இருந்து வரும் நிலையில் விமர்சன ரீதியாக வெற்றியடைவதை விட வசூலில் சாதனை படைத்து விடுகிறது.
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய்லர் திரைப்படம் கிட்டத்தட்ட 700 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. கதை என்று பார்த்தால் புதுசாக எதுவும் இல்லை. ஆனால் ரஜினியின் ஆக்ஷன் , மாஸ் என எப்பவும் போல ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தே வைத்திருந்தார் ரஜினி அந்தப் படத்தின் மூலம்.
அதுமட்டுமில்லாமல் ஜெய்லர் படம் மற்ற மாநிலங்களிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் படத்தில் மல்டி ஸ்டார்கள் இருந்ததுதான். ஒரு பக்கம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். இன்னொரு பக்கம் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் என ஒட்டுமொத்த ரசிகர்களின் வரவேற்பை பெற்றது ஜெய்லர் திரைப்படம்.
இதையும் படிங்க: கோட் 1000 கோடி அடிக்காம போனதுக்கு காரணமே விஜய்தான்!.. என்னப்பா சொல்றீங்க!..
அடுத்ததாக ரஜினியின் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 10 ஆம் தேதி படம் ரிலீஸாகின்றது. தற்போது ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து ஒரு பெரிய எதிர்பார்ப்பிலேயே ரஜினியின் படம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரஜினியின் ஒரு சூப்பர் ஹிட் படத்தால் தங்களுக்கு எவ்வளவு நஷ்டம் என்பதை ஏவிஎம் டிஸ்டிரிப்யூட்டர் ஆனந்த சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இது நாள் வரை ரஜினியின் முரட்டுக்காளை, போக்கிரி ராஜா போன்ற படங்கள் ப்ளாக் பஸ்டர் படங்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம்.
இதையும் படிங்க: ‘கோட்’ காப்பினு சொன்னாங்க.. கொஞ்சம் கூட மாத்தாம அப்படியே எடுத்து வச்சிருக்காரே
ஆனால் அந்தப் படத்திற்காக போட்ட காசு கூட எங்களுக்கு வரவில்லை. பெருத்த நஷ்டம் அடைந்தோம் என ஆனந்த சுரேஷ் கூறியிருக்கிறார். ஆனால் வெளியில் அந்தப் படங்களை சூப்பர் ஹிட், ப்ளாக் பஸ்டர் படங்கள் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அந்தப் படங்களினால் எங்களுக்கு நஷ்டம் என கூறியிருக்கிறார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…