இதெல்லாம் ஒரு படமா? 300,400 கோடி வாங்க தெரியுது - ரஜினியை நிக்க வச்சு கேள்வி கேட்ட பிரபலம்

by Rohini |   ( Updated:2023-12-25 22:54:11  )
rajini
X

rajini

Actor Rajini: தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இன்று இவருடைய படங்கள்தான் கோடிக்கணக்கில் வசூலை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.சமீபத்தில் ரிலிஸான ஜெயிலர் திரைப்படம் கூட எப்பேற்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும்.

அடுத்ததாக த.ச.ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.அதனை அடுத்து லோகேஷுடன் இணைந்து மற்றுமொரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்த கூட்டணியை பார்க்கத்தான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். லோகேஷின் படம் என்றாலே வன்முறை அதிகமாக இளைஞர்களுக்கான படமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்க்கிறார்கள்.

இதையும் படிங்க: பாரபட்சம் பார்த்த ஏஆர் ரஹ்மான்! சிவகார்த்திகேயன் மீது அப்படி என்ன அக்கறை?

இந்த நிலையில் பிரபல எழுத்தாளரும் அரசியல் ஆளுமை கொண்டவருமான தமிழருவி மணியன் ரஜினியை பற்றியும் இந்த கால சினிமாவை பற்றியும் ஒரு விழா மேடையில் கூறினார். அந்த காலத்தில் எந்த சினிமா படங்கள் என்றாலே குழந்தைகள் அவரவர் பெற்றோர்களுடன் சென்று பார்ப்பார்கள். ஆனால் இன்றைய சினிமா படங்கள் அப்படியா இருக்கிறது என கேட்டிருக்கிறார்.

மேலும் பாசமலர் திரைப்படத்தில் அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே இருக்கும் பாசத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக அந்தப் படம் வெளிப்படுத்தியிருக்கும். ஆனால் அந்த மாதிரி ஒரு படத்தை இப்போது வரைக்கும் பார்க்க முடிகிறதா? மேலும் இதை பற்றி ரஜினியிடமே கேட்டிருக்கிறேன். 300, 400 கோடி வாங்குறீங்களே. முள்ளும் மலரும் போல ஒரு படத்தில் மீண்டும் நடிக்க முடியுமா உங்களால்? என கேட்டாராம்.

இதையும் படிங்க: அக்காவுடன் தான் பஞ்சாயத்து!.. தங்கச்சியிடம் டச்சில் இருக்கும் தனுஷ்.. செளந்தர்யாவுக்கு தாராள மனசு தான்!

ரஜினியின் நடிப்பிற்கு தீனி போட்ட படங்களை ஏராளமாக குறிப்பிடலாம். அவை எல்லாம் இத்தனை கோடி பட்ஜெட்டில் உருவாக வில்லையே. ஆனால் படம் மகத்தான வெற்றியைத்தானே பதிவு செய்தது. ஆனால் மீண்டும் அந்த மாதிரி படங்களை கொடுக்க முடியுமா என்று இன்றைய கால சினிமா போக்கு பற்றி பேசினார்.

Next Story