ரெட்கார்டு போட்ட விநியோகஸ்தர்!.. ரஜினி என்ன செய்தார் தெரியுமா?.. சூப்பர்ஸ்டார்னா சும்மாவா!...
தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நடிகராக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரின் வளர்ச்சி அசுர வளர்ச்சி. சூப்பர் ஸ்டாராக அனைவராலும் கொண்டாடப்படும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். சாதாரண மனிதராக சினிமாவிற்குள் நுழைந்து இன்று தமிழக மக்களின் உயிர் நாடியாக திகழ்ந்து வருகிறார்.
இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய ரஜினி சினிமாவிற்காக பல புரட்சிகளை பண்ணியிருக்கிறார். அதனாலேயே சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இன்றளவும் திகழ்ந்து வருகிறார். அதனால் தான் விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொல்வதை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்று வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.
.
rajini1
அதில் ஒரு சம்பவத்தை வலைப்பேச்சு அந்தனன் அவருடைய சேனலில் தெரிவித்தார். ரஜினி உழைப்பாளி போன்ற படங்களில் நடித்திருந்த நேரம். அப்போது ஏதோ சில பல பிரச்சினைகளால் அப்போது இருந்த சினிமா விநியோகஸ்தர் சங்கத்தலைவர் சிந்தாமணி முருகேசன் ரஜினிக்கு ரெட் கார்டு போட்டுவிட்டாராம்.
இதையும் படிங்க : குருநாதருக்காக சந்திரமுகியை விட்டுக் கொடுத்த லாரன்ஸ்!.. அப்போ அவரோட கதி?..
யாரும் ரஜினியின் படங்களை வாங்கக் கூடாது என்றும் கூறிவிட்டாராம். அந்த நேரங்களில் விநியோகஸ்தர்கள் தான் படங்களை பெற்றுக் கொண்டு தியேட்டர் அதிபர்களுக்கு கொடுப்பார்களாம். அதனால் ரஜினியின் படங்களுக்கு தடை போட்டிருக்கிறார். இதை அறிந்த ரஜினி கொஞ்சம் கூட கலங்கவில்லையாம்.
அந்த நேரத்தில் ரஜினியே தமிழ் நாட்டில் இருக்கும் தியேட்டர் அதிபர்களுக்கு போன் செய்து நேரடியாக என் படங்களை தருகிறேன். வாங்கி ரிலீஸ் பண்ணுங்கள் என்று சொன்னாராம். இதை கேட்டதும் தியேட்டர் அதிபர்களுக்கு ஒரே குஷி. ஆனால் இதை முற்றிலும் எதிர்பாராத சிந்தாமணி முருகேசன் அந்த ரெட் கார்டை வாபஸ் பெற்று ஒரு வழியாக சமாதானம் பேசி பிரச்சினையை முடித்திருக்கிறாராம். இப்படி ரஜினி நினைத்திருந்தால் அன்று நேரிடையாக அவர் மூலமாக தியேட்டரில் படங்கள் போயிருக்கும் அதன் மூலம் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியிருப்பார்.
ஆனால் எப்படியோ அந்த பிரச்சினை சுமூகமாக முடிந்து விட்டது. ஆனால் ரஜினியின் இந்த சம்பவம் தான் இன்று ரெட் ஜெயண்ட் பின்பற்றி வருகிறது. அவர்கள்தான் நேரிடையாக படங்களை தியேட்டருக்கு வெளியிடுகிறார்கள். இது ரஜினி அன்று ஆரம்பித்து வைத்த வழி என்று வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.