சிங்கப்பூர் அதிபருக்கு பிடித்த தமிழ் பாடல்... தேவா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சொன்ன சூப்பர் நியூஸ்...

by Akhilan |   ( Updated:2022-11-21 06:41:23  )
சிங்கப்பூர் அதிபருக்கு பிடித்த தமிழ் பாடல்... தேவா நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சொன்ன சூப்பர் நியூஸ்...
X

பிரபல யூ ட்யூப் சேனல் நடத்திய தேவா தி தேவா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் வெளியிட்ட சூப்பர் நியூஸ் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

தேவா தனது 72வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அதற்கு சிறப்பு செய்யும் வகையில் பிளாக் ஷிப் யூ ட்யூப் சேனல் ஒன்று தேவா தி தேவா என்ற இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தியது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தேவா

தேவா

சிங்கப்பூர் அதிபராக இருந்த நாதன். தனது உயிலில் கடைசி ஆசையாக, சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் படத்தில் இடம்பெற்ற, தேவா இசையமைத்த, 'தஞ்சாவூரு மண்ணு' பாடல் தனது இறுதி ஊர்வலத்தில் ஒலிக்க வேண்டும் என எழுதி இருந்தார். அதன்பின் தனது உடலை எடுத்துச்செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.

இதையடுத்து, சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்தபின் அவரது உடலை கொண்டுசென்றபோது, பலநாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாய்ந்து, ஹாங்காங் என பல நாடுகளில் அந்த பாடலின் அர்த்தத்தை மொழிபெயர்த்து அதன் பத்திரிக்கையில் விளக்கியிருந்தனர். ஆனால், எந்த தமிழ் ஊடகமும் அதுகுறித்து எழுதவில்லை.

மீனா

இது தேவாவிற்கு கஷ்டமாக இருந்திருக்கும் தானே. இதுப்போன்ற செய்திகளை தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் முக்கியத்துவம் கொடுத்து எழுதுங்கள் என வேண்டுக்கோள் விடுத்திருந்தார். ரஜினிகாந்தின் எண்ட்ரி கார்டு மியூசிக்கை போட்டது தேவா தான். அதுமட்டுமல்லாமல் ரஜினியின் சினிமா கேரியரில் முக்கிய படங்களான அண்ணாமலை, பாட்சா, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களுக்கு தேவா தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story