Connect with us
rajini

Cinema History

இவ்வளவு ஃபிளாப் படங்களை கொடுத்திருக்கிறாரா ரஜினி!.. அட நம்பவே முடியலயே!..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலத்தில் பஸ் கண்டக்டர் ஆக பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தார். பின்னர் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு பிலிம் இன்ஸ்டியூட் பில் பயின்று நடிப்பினை கற்றுக்கொண்டார். பின்னர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில் ”அபூர்வ ராகங்கள்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வில்லன் கதாபாத்திரம் துணை நடிகன் என படிப்படியாக வளர்ந்தார்.

rajini

பின்னர் இயக்குனர் எம்.பாஸ்கர் இயக்கத்தில் வெளியான ”பைரவி”படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அடுத்தடுத்து அமையப்பெற்ற படங்களில் மூலம் தனது தனி திறமையை வெளிப்படுத்தி மக்களின் மனதில் இடம் பிடித்தார். சினிமாவில் நடிப்பை தவிர இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

வெற்றி ,தோல்வி என்பது யாருக்கும் நிலையானது அல்ல. அவரவரின் சூழலுக்கு ஏற்ப மாறி மாறி வரும். அப்படி ரஜினிகாந்த் பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் சில தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். அப்படி முரட்டுத்தனமான தோல்வி படங்களை வரிசையில் பார்ப்போம்.

RAJINIKANTH

ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ”ஸ்ரீ ராகவேந்திரா” ஆன்மீகத்தின் மீது அவருக்கு அதிகளவு நாட்டம் கொண்டதன் காரணமாக இப்படத்தில் நடித்தார். படம்  பெரும் தோல்வி தழுவியது.

RAJINIKANTH 3

அடுத்து 1986 -ல் இயக்குனர் கே.விஜயின் இயக்கத்தில் வெளியான ”விடுதலை” என்னும் திரைப்படம். இது ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். இதுவும் தோல்வி படமாக அமைந்தது.

RAJINIKANTH

இயக்குனர் ராஜசேகரன் இயக்கத்தில் 1986 இல் வெளியான படம் தான் ”மாவீரன்” இப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக அம்பிகா மற்றும் ஜெய்சங்கர்,தேங்காய் சீனிவாசன்,நாகேஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் இடம்பெற்று இருப்பார்கள். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இருந்த போதிலும் படம் தோல்வி படமாக அமைந்தது.

RAJINIKANTH 3

ரஜினி நடிகராக மட்டுமன்றி ஒரு தயாரிப்பாளராக மாரி அவர் எடுத்த படம் 2002-ல் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ”பாபா” திரைப்படம்.”பாட்ஷா”எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்த இக்கூட்டணி ”பாபா” படத்தால் பெரும் தோல்வி சந்தித்தார்கள்.

RAJINIKANTH 3

சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு 2008-ல் இயக்குனர் பி வாசு மற்றும் ரஜினி இணைந்து படம் ”குசேலன்” இப்படம் மலையாள படம் ஒன்றின் ரீமேக் ஆகும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்த படம் ரசிகரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியில் தழுவியது.

RAJINIKANTH

”முத்து”, ”படையப்பா”வின் வெற்றியை தொடர்ந்து. 2014-ல் இவ்வெற்றி கூட்டணி இணைந்த படம் தான் ”லிங்கா” கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படம் கிளைமாக்ஸ் காட்சிகளில் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால் பெரும் தோல்வி தழுவியது. மேலும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது.

RAJINIKANTH

ரஜினியின் இரு மகள்களும் டைரக்ஷன் மீது கொண்ட ஆசையினால் இருவருமே இயக்குனர் தான். அதில் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயற்றி 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் ”கோச்சடையான்” இது ஒரு டைரக்ட் படமாக அமையாமல் அனிமேஷன் வடிவில் உருவாகியிருக்கும். படத்தில் இடம்பெற்றிருக்கும் VFX காட்சிகள் ஏதோ சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன் மாதிரி அமைந்ததால் ரசிகர்களால் இப்படத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படம் வணிக ரீதியாக பெரும் நஷ்டம் அடைந்து தோல்வியை ஏற்படுத்தியது.

RAJINIKANTH

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தின் 2018 வெளியான திரைப்படம் தான் “காலா”. இந்த படத்தை நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரித்திருந்தார். வழக்கமான ரஜினியின் தோற்றத்தில் இருந்து வேறுபட்ட தோற்றம் மற்றும் கதை அமைப்பில் கோளாறு காரணமாக அப்படம் தோல்வி தழுவியது.அப்படத்தின் தோல்வி தனுஷின் ஒண்டர்பார் நிறுவனத்தையே மூட வைத்ததாக அப்பொழுது கோலிவுட் கிசுகிசுக்கப்பட்டது.

RAJINIKANTH

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ”தர்பார்” இப்படத்தில் கதையின் கிரியேட்டிவிட்டி படுமோசமாக இருந்தது. மேலும் கதையை ரஜினியின் ஃபார்முலாவுக்கு ஏற்றது போல் அமையாமல் இருந்ததன் காரணமாகவும் இருவருக்கும் பெரும் தோல்வி படமாக அமைந்தது.

RAJINIKANTH

2021 ஆம் ஆண்டு இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ”அண்ணாத்த” படத்தை இயக்குனர் சிவா கமர்சியலாக ட்ரை செய்து படு மொக்கை செய்திருப்பார். படத்தை சீரியல் பாணியில் எடுத்ததனாலும் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டதன் காரணமாகவும் இப்படம் தோல்வி படமாக அமைந்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top