இங்க நான் படுத்து தூங்கி இருக்கேன்!.. தளபதி ஷூட்டிங்கில் மணிரத்னத்தை அதிர வைத்த ரஜினி...

by சிவா |
rajini
X

இப்போது 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக, இந்திய சினிமா அளவில் சூப்பர்ஸ்டாராக, ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகராக ரஜினி இருக்கலாம். ஆனால், அவரின் வாலிப பருவம் அப்படி இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஜாலியாக ஊரை சுற்றி வந்தவர்தான் அவர். வறுமையையும் பார்த்திருக்கிறார்.

வாலிப வயதில் அவரிடம் எல்லா கெட்டப்பழக்கங்களும் இருந்தது. இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். ஒருகட்டத்தில் அப்பா மூலமாக பெங்களூர் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் அரசு வேலை கிடைத்து பேருந்து நடத்துனராக வேலை செய்தார். அப்போதும் வேலை முடிந்தவுடன் நண்பர்களுடன் ஜாலியாக பொழுதை கழித்திருக்கிறார்.

இதையும் படிங்க: நடிகையின் நடிப்பை பார்த்து மிரண்ட ரஜினி! ‘தளபதி’ படம் உருவாக காரணமே இவங்கதானா?

வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பெங்களூர், மைசூர் ஆகிய பகுதிகளில் சுற்றி திரிவாராம் ரஜினி. இதையும் அவரே சொல்லி இருக்கிறார். அதன்பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்து நடிப்பு கல்லூரியில் சேர்ந்து பாலச்சந்தர் மூலம் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார்.

ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிக்க துவங்கி வசூல் சக்கரவர்த்தியாகவும் மாறினார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக பல வருடங்கள் இருக்கும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே. விஜய் கூட சமீபகாலமாகத்தான் ரஜினி வாங்கும் சம்பளத்தை தாண்டினார். ஆனால், ரஜினியின் சாதனையை எந்த நடிகராலும் செய்யவே முடியாது.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜ் இப்போ யாரோட சுத்துறாரு தெரியுமா?.. ரஜினிகாந்த் ரசிகர்கள் பார்த்தா காண்டாகிடுவாங்களே!

மைசூரில் கே.ஆர்.சர்க்கிள் என்கிற இடம் உண்டு. மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் இன்ஸ்பெக்டர் கையை ரஜினி வெட்டும் காட்சி அங்குதான் படம் பிடிக்கப்பட்டது. அப்போது சண்டை இயக்குனர் அந்த காட்சியை எப்படி எடுப்பது என ஒத்திகை பார்த்து வந்தார். அப்போது மணிரத்னத்திடம் ரஜினி ‘சார் நான் இந்த இடத்தில் படுத்து தூங்கி இருக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார்.

kr circle

ஆச்சர்யப்பட்ட மணிரத்னம் ‘எப்படி?’ என கேட்க, ‘கண்டக்டராக இருக்கும் போது பஸ்ஸை கொண்டுவந்து இங்கே நிறுத்திவிட்டு இரவு தூங்கிவிடுவோம்’ என சொன்னாராம் ரஜினி. அந்த இடத்தில் படுத்து தூங்கியவர் பெரிய நடிகரானதும், பெரிய நடிகரான பின்னரும் அதை நியாபகம் வைத்திருக்கும் ரஜினியும் ஒரு ஆச்சர்யம்தான்.

Next Story