
Cinema News
அமரனுக்கு ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்!.. அதுக்கு பின்னாடி இப்படி இரு காரணம் இருக்காம்!..
இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட அதை எந்த நேரத்தில் ரிலீஸ் செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம். சரியான நேரம் பார்த்து வெளியிட வேண்டும். பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாத தேதியில் சின்ன நடிகர்களின் படங்கள் வெளியானால் மட்டுமே லாபத்தை பெறும். அதைவிட முக்கியம் எந்த பஞ்சாயத்தும் இல்லாமல் படம் வெளியாக வேண்டும்.
விக்ரம் படம் ஹிட் அடித்ததால் இளம் நடிகர்களை வைத்து சில படங்களை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்க துவங்கினார் கமல்ஹாசன். இதில், சிவகார்த்திகேயன் படமும் ஒன்று. 2017ம் வருடம் வெளிவந்த ரங்கூன் படத்தை இயக்கியவர் இவர். ஒரு ராணுவ வீரரின் கதையை வைத்து திரைக்கதை அமைந்திருந்தார் ராஜ்குமார் பெரியசாமி.
இதையும் படிங்க: விடுதலை 2-வுக்கு பிறந்த விடிவுகாலம்!.. படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?!. அட சூரியே சொல்லிட்டாரே!..
இப்படத்தின் டீசர் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஒரு வித்தியாசமான சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்க்கலாம் என்பது டீசரை பார்க்கும்போதே புரிந்தது. முதன் முறையாக ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இப்படத்தின் பல காட்சிகள் காஷ்மீரில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.
அதனால், சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டுக்கொண்டே வந்தது. தற்போது ஒருவழியாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. வருகிற செப்டம்பர் 27ம் தேதி இப்படத்தை வெளியிட ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
இதையும் படிங்க: அர்ஜூன் வீட்டு திருமணத்தில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? மூணு நாளைக்கு ஒரே ஆட்டம்தான் போங்க
அது ஒன்றும் முக்கியமான தேதி இல்லையே என விசாரித்தால், அந்த தேதியில் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும், அந்த தேதிக்கு பின் பல பெரிய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவிருக்கிறது. எனவேதான், செப்டம்பர் 27ம் தேதி படத்தை வெளியிட்ட திட்டமிட்டிருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
இந்த படத்தோடுதான் சிம்பு – தேசிங்கு பெரியசாமி படமும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னமும் துவங்கவில்லை. கமலும் நடிகராக பிசி ஆகிவிட்டார். இப்போது அவர் மணிரத்தினத்தின் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் சிம்புவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.