முடிஞ்சிச்சு…. ராஜ்கமலால் மீண்டும் ட்ரெண்டாகும் அமரன் டீம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…
Amaran: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் மீண்டும் அமரன் படக்குழு ட்ரெண்டாகி வருகிறது. அதுகுறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் அமரன். அப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவருகிறார். சாய் பல்லவி இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது.
இதையும் படிங்க: சுயநலவாதியான சூர்யா! இப்படி ஒரு காரியத்தை செய்வாருனு நினைக்கல.. ஆதங்கத்தில் பிரபலம்
இப்படத்திற்கு உடல் எடையை அதிகரித்து பயிற்சியில் ஈடுபட்டு ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறாராம். இப்படத்தின் டைட்டில் புரோமோ மிகப்பெரிய அளவில் வைரலானது. நடிப்பில் அசுரத்தனம் காட்டும் சிவாவிற்கு இப்படம் பெரிய அளவில் வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தினை படக்குழு முடித்து இருக்கிறது. இதுகுறித்த வீடியோவை இணையத்தில் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாள் முடிந்தது எனக் குறிப்பிட்டு இருக்கும் இந்த வீடியோவில் அமரன் கெட்டப்பில் இருக்கும் சிவாவுடன் சண்டை இயக்குனர் அன்பறிவு மாஸ்டர்களும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கமலின் சூப்பர்ஹிட் படங்களில் நடிக்க மறுத்த சத்யராஜ்… அந்தப் படத்துக்கு மட்டுமாவது ‘ஓகே’ சொல்லியிருக்கலாமே..!