ராஜ்கிரணை திட்டம் போட்டு அசிங்கப்படுத்திய தெலுங்கு சூப்பர் ஹீரோ.! சினிமாவில் இதெல்லாம் சகஜம்.!
தமிழில் நடிகர் ராஜ்கிரணுக்கு என்று தனி மார்க்கெட் இப்போதும் இருக்க தான் செய்கிறது. காரணம் அவர் பணம் கிடைக்கிறது என்று எல்லா படத்திலும் நடித்துவிட மாட்டார். அவரிடம் சென்று கதை கூறுவது ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை கூறுவதற்கு சமம்.
அந்த படத்தின் கதை பிடித்திருந்தால் மட்டுமே ராஜ்கிரண் படத்தில் நடிப்பார். அப்படி அவர் விஷாலுடன் இணைந்து நடித்த திரைப்படமே சண்டக்கோழி. விஷாலை விட ராஜ்கிரணுக்கு மாஸ் கதாபாத்திரம்.
அந்த படம் தெலுங்கிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கி விட்டது. அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் ஒரு படத்தில் ராஜ்கிரணுக்கு தாத்தாவாக ஒரு மாஸ் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகிவிட்டார். படத்தின் பாதி ஷூட்டிங் முடிந்துவிட்டது.
இதையும் படியுங்களேன் - எனக்கு ஒரு பிரச்னைனா ஓடி வரும் மனிதன் அவர்தான்.! சரத்குமார் உருக்கம்.!
பின்னர் அதனை பார்த்த ராம்சரண் அப்பா சிரஞ்சீவி, இந்த படத்தில் என மகன் ஹீரோவா அல்லது ராஜ்கிரண் பெரியவரா என கேட்டுள்ளார். அந்த கதாபாத்திரத்தை வில்லனாக மாற்றிவிடுங்கள் என கூறவே, அதற்கு ராஜ்கிரண் ஒத்துக்கொள்ள மாட்டார் என கூறியுள்ளனர். அப்போ ராஜ்கிரணை தூக்கிவிட்டு பிரகாஷ் ராஜை போட்டுவிடுங்கள் என கூறிவிட்டார்.
இதனால், முதல் ஷெடியூல் முடிந்து இரண்டாவது ஷெடியூல்க்கு கூப்பிடுவார்கள் என காத்திருந்த ராஜ்கிரணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் பிரகாஷ் ராஜ் நடித்து அந்த படம் ரிலீஸ் ஆகியது.