நகைக்காக போலீசிடம் சென்ற ராஜ்கிரண் வளர்ப்பு மகள்... ஆனா அவர் மனைவிக்கு இவங்க பொண்ணாமே! குழப்பி விட்ட புது ஜோடி
என் நகை வேண்டும் என ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவர்களுக்கு தொந்தரவு கொடுத்ததாக, காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நான் ராஜ்கிரண் மகள் இல்லை. ஆனா அவங்க என் அம்மா தான்.
பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகளும், நடிகர் முனீஸ் ராஜாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அவர் என் மகளே இல்லை, வளர்த்தேன். அதுக்கு நல்ல பாடம் கற்பித்துவிட்டார் என ராஜ்கிரண் பேஸ்புக்கில் ஒரு பதிவினை போட்டிருந்தார். இதை தொடர்ந்து பலரும் அவருக்கு ஆதரவும் தெரிவித்தாலும், சில எதிர்ப்புகள் இருந்தன.
சில காலம் அமைதியாக இருந்த பிரச்னை மீண்டும் விஸ்வரூபமெடுத்து இருக்கிறது. காசு கேட்டு தொல்லை செய்வதாக முனீஸ் ராஜா மீது புகார் கொடுத்தார் ராஜ்கிரண். அதுகுறித்து விசாரிக்கையில், ராஜ்கிரணின் மனைவிக்கு முதல் திருமணத்தில் பிறந்தவர் தான் பிரியா. அவர் தந்தையை விட்டு வரும்போது சின்ன குழந்தையாக இருந்தவர் நிறைய நகைகளை போட்டு இருந்தாராம்.
இதையும் படிங்க: ராமராஜனுக்கு கதை கேட்க போய் நடிகரான முக்கிய பிரபலம்… அட இந்த படத்தில தானா?
அந்த நகையை திரும்பி கேட்கும்படி, பிரியாவின் நிஜ தந்தை கூறியதை தொடர்ந்தே இவர்கள் நகையை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு தான் தற்போது புகார் வரை சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் இதுகுறித்த விசாரணையின் போது ராஜ்கிரண் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முனீஸ்ராஜா மற்றும் பிரியா காவல் நிலையத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்து இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். மீண்டும் பூதாகரமாகி இருக்கும் இந்த பிரச்னையை நெருங்கிய வட்டத்தில் வைத்து முடிக்குமாறு பலரும் ராஜ்கிரணுக்கு அட்வைஸ் செய்துள்ளனராம்.