தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலுமே பெரும் வெற்றியைக் கண்டவர் நடிகர் ராஜ்கிரண்.
ராஜ்கிரண் நடித்த இயக்கிய தயாரித்த பல படங்கள் பெரும் ஹிட் கொடுத்துள்ளனர. அவர் நடித்த அரண்மனைக்கிளி, என் ராசாவின் மனசிலே போன்ற திரைப்படங்கள் இப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் திரைப்படங்களாக உள்ளது.
ராஜ்கிரண் சினிமாவிற்கு வந்த புதிதில் படங்களில் நடித்துக் கொண்டு மட்டும் இருந்தார் ஆனால் போகப் போக அவருக்கு படத்தை இயக்குவதிலும் அதிக ஆர்வம் இருந்ததால் தொடர்ந்து திரைப்படங்கள் இயக்கத் தொடங்கினார் அரண்மனைக்கிளி திரைப்படம் ராஜ்கிரன் இயக்கி அவரே நடித்து வெளியான திரைப்படமாகும்.
அரண்மனைக்கிளி அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வசூல் சாதனையை அரண்மனை கிளி செய்தது அந்த படத்தில் இளையராஜா இசையமைத்த 9 பாடல்களுமே மக்கள் மத்தியில் பிரபலமாக வரவேற்பை பெற்றனர்.
ராஜ்கிரண் செய்த ட்ரிக்:
ஏனெனில் அப்போது இளையராஜாவிற்கு மிகப்பெரும் மார்க்கெட் இருந்தது. இளையராஜா இசையமைக்கும் படம் என்றாலே அதை மக்கள் பார்ப்பதற்கு தயாராக இருந்தனர். இதை புரிந்து கொண்ட ராஜ்கிரண் பிறகு தயாரிப்பாளராகும் பொழுது இளையராஜாவை முன்னிலைப்படுத்த கற்றுக் கொண்டார்.
பொதுவாக பட போஸ்டர்கள் வெளியாகும்போது அதில் படத்தில் நடித்த கதாநாயகர்கள் கதாநாயகிகள் புகைப்படங்கள் இடம் பெறுவதை பார்க்க முடியும். ஆனால் ராஜ்கிரண் தயாரிக்கும் திரைப்படங்கள் அனைத்திற்கும் போஸ்டர் வழியாகும் போது அதில் இளையராஜாவின் புகைப்படத்தை பெரிதாக வைத்து இளையராஜாவின் இசையில் என போட்டே படத்தின் பெயரை போடுவார்.
இதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு ஒரு பெரும் கூட்டம் வர துவங்கியது அப்போதைய காலகட்டத்தில் இளையராஜாவை முன்னிலைப்படுத்தி மக்கள் மத்தியில் மார்க்கெட்டை பிடிக்கும் ஒரு யோசனையை ராஜ்கிரண் மட்டுமே கொண்டிருந்தார். அது அவருக்கு பெரும் வெற்றியையும் பெற்று தந்தது.
இதையும் படிங்க: கரண்ட் பில் கூட கட்ட முடியாமல் இருட்டில் வாழ்ந்த சந்திரபாபு!.. எம்.ஜி.ஆர் செய்த பேருதவி!..
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…