கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் ரஜினி படத்துல நடிக்க மாட்டேன்- கொள்கையில் புலியாய் நின்ற ராஜ்கிரண்…
தமிழ் சினிமாவில் கிராமத்து கதாப்பாத்திரங்களில் நடிப்பதற்காக உருவெடுத்த நடிகராக திகழ்ந்தவர்தான் ராஜ்கிரண். மிகவும் கம்பீரமான கதாப்பாத்திரங்களில் கர்ஜிக்கும் நடிப்பை பல திரைப்படங்களில் வெளிப்படுத்திய ராஜ்கிரண், ஒரு நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வந்தார்.
“என் ராசாவின் மனசிலே”, “அரண்மனை கிளி” உட்பட பல வெற்றித்திரைப்படங்களில் நடித்த ராஜ்கிரண், “நந்தா”, “கோவில்”, “சண்டக்கோழி”, “முனி” போன்ற பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் மிக சிறப்பாக நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு முறை ரஜினி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என தவிர்த்துவிட்டார். அவர் ஏன் அப்படி செய்தார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சிவாஜி”. இத்திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக சுமன் நடித்திருந்தார். ஆனால் இத்திரைப்படம் உருவாவதற்கு முன்பு சுமன் கதாப்பாத்திரத்தில் ராஜ்கிரணை நடிக்க வைக்கலாம் என படக்குழு முடிவு செய்தனர். அதன்படி படக்குழுவினர் ராஜ்கிரணை அணுகினார்கள்.
அப்போது ராஜ்கிரண், “ரொம்ப மகிழ்ச்சி, ஆனால் இந்த கதாப்பாத்திரத்தில் என்னால் நடிக்கமுடியாது. இதில் ஒரு கெட்டவனாக நடிக்க வேண்டும். ஏதோ நான் வாழ்கிற வாழ்க்கையில் இருந்து சில பகுதிகளை எடுத்து யதார்த்தமாக நடித்து வருகிறேன். அதனால் வில்லன் கதாப்பாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது.
இந்த படத்தில் நடித்தால் சம்பளம் அதிகமாக வரும் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால் எந்த காரணத்தை கொண்டும் பணத்திற்காக வில்லனாகவோ அல்லது இது போன்று எனக்கு வராத கதாப்பாத்திரத்திலோ நான் நடிக்கமாட்டேன். எனக்கு எது வருமோ அதை மிகவும் நேர்மையாக செய்து வருகிறேன்” என கூறி அந்த வாய்ப்பை வேண்டாம் என்று தவிர்த்துவிட்டாராம்.
இதையும் படிங்க: எம்.எஸ்.வி வேண்டாம் என ஒதுக்கிய பாடல்!.. கேவி.எம்மை வைத்து பெரிய ஹிட் கொடுத்த வாலி