ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்து பேசிய மாரிமுத்துவை பந்தாடிய ராஜ்கிரண் – இளையராஜா மேல் இப்படி ஒரு பாசமா?

Published on: July 25, 2023
raj
---Advertisement---

தமிழ் சினிமாவில் ராஜ்கிரண் ஒரு மதிக்கத்தக்க நடிகராக திகழ்ந்து வருகிறார். ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக ராஜ்கிரண் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஒரு சிறந்த நட்சத்திரமாக வலம் வருகிறார். ராஜ்கிரண் முதன் முதலில் தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் என் ராசாவின் மனசிலே.

அந்த திரைப்படம் 100 நாள்களை கடந்து வெள்ளிவிழா ஓடியது. அதனை அடுத்து அரண்மனைக்கிளி,  எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ராஜ்கிரண் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்தார்.

raj1
raj1

நீண்ட நாள்களுக்கு பிறகு பவர் பாண்டி என்ற படத்தில் நடித்து ஒரு கம்பேக் கொடுத்தார். மேலும் குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். ராஜ்கிரண் படங்கள் பெரும்பாலும் வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணம் இளையராஜா இசைதான்.

இளையராஜாவின் இசையில் ராஜ்கிரண் படங்களில் அமைந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதுமட்டுமில்லாமல் ராஜ்கிரணும் இளையராஜாவின் மீது அலாதி அன்பை கொண்டிருந்தாராம். இந்த நிலையில் பிரபல நடிகரும் துணை இயக்குனருமாக இருந்த மாரிமுத்துவும் ராஜ்கிரண் அலுவலகத்தில் தான் வேலையில் இருந்தாராம். அவர்கள் அனைவரும் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருந்திருக்கின்றனர்.

raj3
raj3

இந்த நிலையில்  ‘இளையராஜாவால் தன்னை ராஜ்கிரண் அவர் அலுவலகத்தில் இருந்து விரட்டியடித்தார்’ என்ற ரகசியத்தை மாரிமுத்து பகிர்ந்திருக்கிறார். அதாவது ரோஜா படத்தை பார்த்துவிட்டு மாரிமுத்து அந்த அளவுக்கு பெருமையாக பேசிக் கொண்டிருந்தாராம். மேலும் அந்தப் படத்தில் அமைந்த இசையை பற்றியும் ஏ.ஆர்.ரகுமான் பற்றியும் நாள்முழுக்க பேசிக் கொண்டிருந்தாராம். இதை மாரிமுத்துவுடன் இருந்த சில பேர் ராஜ்கிரணிடம் போய் சொல்லியிருக்கிறார்கள்.

இதை கேட்ட ராஜ்கிரண் அப்செட்டில் இருந்தாராம். இதை பயன்படுத்தி கொண்டு இன்னும் சிலர் மாரிமுத்துவை பற்றி இல்லாததையும் சொல்லி கடுப்பேற்றியிருக்கிறார்கள். அதனால் ராஜ்கிரண் மாரிமுத்துவை அவர் அலுவலகத்தில் இருந்து வெளியே அனுப்பி விட்டாராம்.

இதையும் படிங்க : ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு வந்த சிக்கல் – தலைவருக்கே ஆட்டம் காட்டிட்டாங்களே!

அதன் பிறகுதான் ஆசை படத்திற்காக வசந்துடன் இணைந்தாராம் மாரிமுத்து. இந்த தகவலை மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.