தமிழ் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் விஜயகாந்த். முரளியோ அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் சினிமாவுக்கு வந்தவர். இருவருமே துவக்கத்தில் சில அவமானங்களை சந்தித்து இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் இருவரும் சினிமாவில் நுழைந்த காலத்தில் எந்த ஹீரோவும் கருப்பாக இருக்க மாட்டார்கள்.
வெள்ளையாக, சிவப்பாக இருப்பவர்கள் மட்டுமே சினிமாவில் ஹீரோவாக நடிக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இந்த விஷயத்தை விஜயகாந்தும், முரளியும் உடைத்தனர். விஜயகாந்த் ஒரு பக்கம் முன்னேறி வந்த போது முரளியும் நிறைய படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: வடிவேலு காமெடியால் வந்த பிரச்சனை!.. கூட்டமாக வந்த போலீஸ்!.. பதறிப்போன வைகைப்புயல்!..
அதுவும் ஒருதலைக்காதல் கதை என்றாலே கூப்பிடு முரளி என்கிற நிலை 90களில் இருந்தது. இதயம் படத்தில் ஒரு தலைக்காதலை மனதில் வைத்துக்கொண்டு அதை சொல்ல முடியாமல் அவர் தவிப்பது பலரையும் உருக்கியது. அதன்பின் அதுபோன்ற பல கதைகளில் முரளி நடித்திருக்கிறார்.
விஜயகாந்தோ அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இதில் என்ன சோகம் என்னவெனில் இருவருமே இப்போது நம்முடன் இல்லை. இவர்கள் இருவருடன் நெருங்கி பழகியவர் நடிகர் ராஜ்கிரண். இந்நிலையில், அவர்கள் இருவருடன் கொண்டிருந்த அழகான உறவு பற்றி ஒருமுறை பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: கமல் செய்யாததை எல்லோருக்கும் செய்த விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்!..
வீரத்தாலாட்டு படத்தில் என் மகனாக நடித்தார் முரளி. பட்டத்து அரசன் படத்தில் என் பேரனாக நடித்தார் முரளியின் மகன் அதர்வா. முரளி என்னை ‘அண்ணா அண்ணா’ என பாசமாக அழைப்பார். அதேபோல்தான் கேப்டன் விஜயகாந்தும் என்னை பார்க்கும் போதெல்லாம் ‘அண்ணா அண்ணா’ மிகவும் சந்தோஷமாக பேசுவார். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு இருந்தது’ என ராஜ்கிரண் சொல்லி இருந்தார்.

முரளியின் மகன் அதர்வாவுக்கு சினிமாவில் ஒரு இடம் கிடைத்துவிட்டது. ஆனால், கேப்டனின் மகன் சண்முக பாண்டியனுக்கு இன்னும் அந்த இடம் கிடைக்கவில்லை. அதுவும் நடந்துவிட்டால் அந்த வெற்றிடம் நிரம்பிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
