அடிதடிதான் ஹீரோயிசமா? சமீபகால படங்களை பற்றி கடுப்பான ராஜ்கிரண்

by Rohini |   ( Updated:2025-05-07 05:02:51  )
rajkiran
X

rajkiran

Rajkiran: 90கள் காலகட்டத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும் சண்டைக் காட்சிகளாலும் மக்களை ஈர்த்தவர் நடிகர் ராஜ்கிரண். என் ராசாவின் மனசிலே, மாணிக்கம் என பல படங்களில் இவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோவுக்கு என ஒரு இமேஜ் இருக்கும் என்ற ஒரு முறையை முற்றிலுமாக மாற்றியவர் ராஜ்கிரண்.. திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருந்தவர்.

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இவர் படங்களை கொடுத்திருக்கிறார். சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தாத்தா கேரக்டர், அப்பா கேரக்டர் என தன் வீட்டில் இருக்கும் ஒரு முதியவர் எப்படி எல்லாம் இருப்பாரோ பழகுவாரோ அப்படி ஒரு பிம்பத்தை ராஜ்கிரண் நடிப்பின் மூலம் நாம் இப்போது பார்க்கலாம்.

மிகவும் எதார்த்தமாக நடிக்க கூடியவர். இவர் காலகட்டத்தில் வெளியான படங்கள் அனைத்துமே குடும்ப பங்கான படங்களாகவே அமைந்திருக்கின்றன. குடும்பங்களாக போய் தியேட்டரில் பார்க்கும் படங்களாகவே வெளிவந்திருக்கின்றன. ஆனால் சமீப காலமாக வன்முறை அடிதடி வெட்டுக்குத்து என இளைஞர்களின் மனதை மாற்றும் மாதிரியான கதைகள் வந்து கொண்டிருக்கின்றன .

ராஜ்கிரண் தற்போது சூரி நடிக்கும் மாமன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடந்தது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலையில் படத்தை பற்றி ராஜ்கிரண் கூறும் போது குடும்பங்கள் கொண்டாடும் படங்கள் வெளியாக வேண்டும். குடும்ப பங்கான படங்கள் தான் வெளியாக வேண்டும்.

அதற்கு மாமன் பட இயக்குனர் ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்க வேண்டும் .மாஸ் கதை என்றால் அடிதடி இருந்தால்தான் மாஸ் என நினைக்கிறார்கள். அப்படி இல்லை. குடும்ப படம் தான் எக்காலத்துக்கும் ஜெயிக்கும். நின்னு பேசும். இப்ப உள்ள ஒரு சில இயக்குனர்கள் அடிதடி படங்களாகவே எடுத்து வருகின்றனர். அது அந்தந்த காலத்திற்கு தான் கை கொடுக்கும். மற்றபடி குடும்ப படம் தான் எப்போதுமே மக்களை ஈர்க்கும் படமாக அமையும் என அந்த பேட்டியில் ராஜ்கிரண் கூறியிருக்கிறார்.

Next Story