ஒரு சில நடிகர்களை பார்த்தல் நாம் சொல்லிவிடுவோம். எனன, எல்லா படத்திலேயும் ஒரே மாதிரி நடிக்கிறார்? இவர் வேறு மாதிரி நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் கூறுவதுண்டு. ஆனால் வெகு சிலரே அந்த கமெண்ட்களில் சிக்க மாட்டார்கள்.
அதில், ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்றோர் இருக்கின்றனர். இவர்கள் படங்களின் கதைக்களங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ரசிகர்கள் ரசிக்கும்படியாக கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் நடித்து வருகின்றனர். அதில் ஒருவர் தான் ராஜ்கிரண்.
அன்றும் இன்றும் என்றும் ராஜ்கிரண் ஒரே ரகம் தான். கிராமத்து கட்டுமஸ்தான உடற்கட்டு, காட்டுத்தனமான கம்பீரம். மிரட்டும் நடிப்பு. இதுதான் ராஜ்கிரண். தயாரிப்பாளராக இருந்து, நாயகனாக மாறி, அதன் பின்னர் அவசரப்படாமல் தனக்கு எந்த கதாபாத்திரம் பொருந்துமோ அதில் மட்டும் நடித்து தற்போது வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் ராஜ்கிரண்.
இதையும் படியுங்களேன் – கடவுளுக்கு அடுத்து கமல் சார் தான்… கண்கலங்க வைத்த மூத்த நடிகரின் நெகிழ்ச்சி பதிவு..
இவரிடம் ஓர் பழக்கம் உண்டு. தற்போது ஹீரோவாக நடிக்க வில்லை என்றாலும், தனது கதாபாத்திரத்தை நன்கு கேட்டறிந்து, ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே நடிப்பார். இல்லையென்றால் நோ தான்.
இதையும் படியுங்களேன் – இந்த தடவை யாரும் சிக்கல… விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு.! மகிழ்ச்சியில் பிக் பாஸ் ரசிகர்கள்…
அவர் மற்ற ஹீரோ படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னரும், நந்தா, பாண்டவர் பூமி, கோவில், சண்டக்கோழி என மற்ற ஹீரோ படமாக இருந்தாலும், அதில் கதைக்களமும், ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் இவராக தான் இருப்பார். அதையும் எந்த குறையும் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை செய்து முடிப்பார் ராஜ்கிரண்.
கொம்பன், ரஜினி முருகன், சண்டக்கோழி 2 என மீண்டும் அதே கம்பீரத்துடன் தானும் அப்படத்தில் ஹீரோ தான் என நடித்து வந்தவரை தனுஷ் தான் முதலில் இயக்கிய பா.பாண்டி படத்தில் ராஜ்கிரணை மீண்டும் ஹீரோவாக்கி வெற்றியும் கண்டார். அண்மையில் ரிலீஸ் ஆன, விருமன் படத்தில் கூட கம்பீரம் குறையாமல் நடித்திருந்தார் நம்ம ராஜ்கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…