ராஜ்கிரன் தயாரித்து, நடித்து 1991ம் ஆண்டு வெளியான திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இப்படத்தின் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். இந்த படத்தில்தான் வடிவேலு முதன் முதலாக அறிமுகமானார். கவுண்டமனியிடம் உதை வங்கும் ஒரு சிறிய வேடத்தில் அவர் நடித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த ராஜ்கிரண் வடிவேல் எப்படி இப்படத்தில் அறிமுகமானார் என்பது பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
நான் தயாரிப்பாளராக இருந்த போதே எனக்கு ரசிகர் மன்றம் இருந்தது. அந்த மன்றத்தை சேர்ந்த ஒருவர் என் மீது வெறித்தனமான அன்பு வைத்திருந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், நான் நேரில் வந்து தாலி எடுத்து கொடுத்தால்தான் திருமணம் செய்வேன் என அடம்பிடித்தார். எனவே, அவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நான் மதுரைக்கு சென்றேன்.
திருமணம் முடிந்த பின் ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அப்போது பேச்சு துணைக்காக அந்த ரசிகர் ஒருவரை அனுப்பி வைத்தார். அவர்தான் வடிவேல். பல விதங்களில் பேசி என்னை சிரிக்க வைத்தார். எனவே, அவரை என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்க வைத்தேன்.
ஒரு காட்சியில் அவராகவே சொந்த வசனம் பேசினார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் அவருக்கான காட்சிகளை அதிகப்படுத்தினேன். அவருக்கு ஒரு பாடலும் கொடுத்து நடிக்க வைத்தேன்’ என ராஜ்கிரண் கூறினார்.
அதன்பின் வடிவேல் தேவர்மகன், சிங்கார வேலன் ஆகிய படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக ஒரு இடத்தை பிடித்து, வைகைப்புயலாக மாறி ரசிகர்களின் மனதில் நிங்கா இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Sun serials:…
சொர்க்கவாசல் திரைப்படத்தின்…
Vijay serials:…
Vignesh Shivan: …
பிக்பாஸ் சீசன்…