Cinema News
பெத்தவங்க இறப்புக்கு கூட வராத ராஜ்கிரன்!!.. அப்போ அரண்மனைக்கிளி படத்தில் வரும் காட்சி உண்மைதான் போல!!..
ராஜ்கிரண் ஆரம்பகால வாழ்க்கை
தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ்கிரண் அவர்கள் தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் ஆரம்ப காலங்களில் தனது திரைப்பட பணியை தொடங்கினார் இந்த நிலையில் முதன்முதலாக என் ராசாவின் மனசிலே எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த நிலையில் ராஜ்கிரனின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்ட காட்சிகள் ஆகும்.
அதனாலேயே இந்த படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது இந்த படத்தில் மீனா அவர்கள் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்தில் பெயர் சோலை அம்மா இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை தந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் நடிகை மீனா அவர்களுக்கு கிடைத்தது.
ராஜ்கிரனின் திரைப்பயணம்
இந்த நிலையில் ராஜ்கிரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை என்னும் பகுதியில் பிறந்த ஒரு நடிகர் ஆவார். இவர் ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது இதுவரையில் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். இவரது உண்மையான பெயர் மொய்தீன் அப்துல் காதர். சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ராஜ்கிரன் அவர்களுக்கு தனது வீட்டில் கொடுத்த உற்சாகத்தின் மூலம் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் கீழக்கரை பகுதியை சேர்ந்த அவருடைய உறவினர் ஒருவரின் உதவியால் திரைப்படம் விநியோகம் செய்யும் ஒரு கம்பெனியில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே அவருக்கு தினமும் கொடுக்கப்பட்ட கூலி வெறும் நான்கு ரூபாய் 50 காசு ஆனால் நான்கு ரூபாயில் இரண்டு ரூபாயை செலவழித்து விட்டு இரண்டு ரூபாய் 50 பைசாவை சேமித்து வைப்பார்.
இவர் மாதம் வீட்டிற்கு சுமார் 75 ரூபாய் வரை அனுப்பி வந்தார் பிறகு இந்த தொழிலில் இவருக்கு அனுபவம் வர ஆரம்பித்ததன் மூலம் நிறைய கற்றுக் கொண்டார். இவருடைய சம்பளமும் நாளுக்கு நாள் அதிகரித்தது பிறகு ஒரு நாள் சம்பளம் மட்டும் 150 ரூபாய் வரை கூட்டிக் கொடுக்கப்பட்டது மாத சம்பளம் ஆயிரம் ரூபாய் வரை வாங்கி இருந்தார்.
தயாரிப்பாளராக களம் இறங்கும் ராஜ்கிரண்
இந்தத் துறையிலேயே இருந்ததன் மூலம் திரைப்படத்தில் மக்களின் பார்வையை நன்கு உணர முடிந்தது எந்தெந்த திரைப்படம் வெற்றி பெறும் என்பதை அவரால் கணிக்க முடிந்தது. இந்த நிலையில் அந்த கம்பெனியில் வேலை செய்வதை நிறுத்திவிட்டு தனியே இவரே தானே ஒரு கம்பெனியை தொடங்கினார். இதன் மூலம் அவர் முதல் முதலாக ஒரு படத்தை விநியோகம் செய்தார் அந்த படத்தின் பெயர் வாழ்ந்து காட்டுகிறேன்.
அந்தப் படம் ஒரு வெற்றி படமாக அமைந்ததால் அவருக்கு நிறைய லாபம் கிடைத்தது இதனாலையே இவருக்கு நிறைய திரைப்படங்கள் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது ஒரு படத்தை முன்கூட்டியே வெற்றி தோல்வி என்பதை முடிவெடுக்கும் திறமை இருந்தது ஆதலால் வெற்றி பெறும் திரைப்படத்தை விநியோகம் செய்து வந்தார்.
இந்த நிலையில் இவர் வினியோகம் செய்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா இசையமைத்த படங்களையே விநியோகம் செய்து வந்தார் இந்த விஷயம் இளையராஜா அவர்களின் காதுக்கு சென்றது உடனே அவரை நான் பார்க்க வேண்டும் என்று அவர்களை அழைத்து அவரிடம் நீ ஏம்பா விநியோகம் செய்கிறாய் சொந்தமா நீயே ஒரு படம் தயாரிக்க வேண்டியது தானே அப்படின்னு இளையராஜா சொல்லி அவரை திரைப்பட தயாரிப்பாளராக களம் இறங்க சொன்னார்.
அதற்கு ராஜ்கிரன் நான் தயாரிக்க ரெடி ஆனால் அந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் உடனே இளையராஜா கண்டிப்பா நான் பண்ணி கொடுக்கிறேன் அப்படின்னு சம்மதத்தை தெரிவித்தார்.
இந்த நிலையில் ராஜ்கிரன் அவர்கள் நடிகர் ராமராஜன் அவரை வைத்து ராசாவே உன்னை நம்பி எனும் திரைப்படத்தை தயாரித்தார் அவரது முதல் திரைப்படமே மாபெரும் வெற்றியை தந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பாளர்களில் ஒருவரானார். இந்த படத்தின் மூலம் ராஜ்கிரன் அவர்களுக்கு தயாரிப்பு மீது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது.
சொந்த ஊர் மக்களே ராஜ்கிரனை தூற்றிய காரணம்
இந்த நிலையில் ராஜ்கிரன் அவர்களின் சொந்த ஊரான கீழக்கரையில் அவரது வீடு ஒன்று உள்ளது.அதில் அவரது முன்னாள் மனைவி ஒருவரும் அவரது மகளும் இருக்கிறார் ஆனால் ராஜ்கிரண் அவர்கள் அந்த கீழக்கரை ஊருக்கு வந்த சுமார் 25 வருடங்கள் ஆகிவிட்டன. அவரது பெற்றோர்கள் இறப்பிற்கு கூட ராஜ்கிரன் அவர்கள் வரவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.
அந்த பகுதியில் உள்ள வர்களிடம் ராஜ்கிரனை பற்றி விசாரித்தால் அவர்கள் ராஜ்கிரனை பற்றி பெரிய அபிப்ராயம் கொண்டவர்கள் மாதிரி தெரியவில்லை ஏனெனில் சொந்த ஊருக்கே 25 வருடங்கள் வராத இவருக்கு யார் மரியாதை கொடுப்பார்.
இந்த நிலையில் ராஜ்கிரண் அவர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தயாரிப்பாளர்களில் ஒருவரானார். நிறைய திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டார் பிறகு அவருக்கு தானே ஒரு நடிகராக நடிக்க ஆசைப்பட்டார் அதன் விளைவு மிகவும் மோசமாக முடிந்தது மாணிக்கம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த திரைப்படம் மக்களிடையே மிகவும் மோசமாக வரவேற்பை பெற்றதன் மூலம் இந்த திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது இதனால் ராஜ்கிரன் அவர்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜ்கிரன் கால் வைக்கும் அனைத்து இடங்களிலும் தோல்வி முகம் அரங்கேறியது.
நீண்ட காலங்களாக திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் ஒதுக்கப்பட்டு வந்த ராஜ்கிரன் அவர்களுக்கு இயக்குனர் பாலா தயாரிப்பில் நந்தா எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இதுவே இவருக்கு மீண்டும் சினிமாவில் தனது பயணத்தை தொடங்க ஒரு வாய்ப்பாக அமைந்தது இதனை தொடர்ந்து சண்டக்கோழி பவர் பாண்டி போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. இந்த பவர் பாண்டி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நிறைய விருதுகளையும் வாங்கி இருந்தார் ராஜ்கிரண்.
மேலும் ராஜ்கிரண் தற்சமயம் அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் தேவையான இடத்தில் மட்டும் கதைக்கு தேவைப்படும் நேரத்தில் நடித்து வருகிறார்.