என் ரேஞ்சே இப்போ வேற.! இந்த நாட்டில் தான் கதை எழுதுவேன்.! நொந்து போன கமல்.!

by Manikandan |   ( Updated:2022-03-04 12:57:34  )
kamal haasan
X

கமல்ஹாசன் தற்போது தனது அரசியல் பயணத்திற்கு கொஞ்சம் கேப் விட்டுவிட்டு அடுத்தடுத்து, படங்களில் நடிக்கவும், தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் அடுத்தடுத்து வெவ்வேறு ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கவும் முனைப்பு காட்டி வருகிறார்.

கமல் நடிக்க லோகேஷ் இயக்கும் விக்ரம் திரைப்படம் ராஜ்கமல் பட நிறுவனம் தான் தயாரிக்கிறது. மேலும், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தையும் ராஜ்கமல் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ரங்கூன் எனும் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இதையும் படியுங்களேன் - நான் ஒரு 25 பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சிருக்கேன்.! வயசானாலும் உங்க வாய் குறையலயே.!

anirudh

இந்த படத்திற்கான கதை விவாதத்தில் ராஜ்குமார் பெரியசாமி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பட இயக்குனர் அனிருத்தின் நண்பர். இவர் அனிருத் உடன் துபாய் சென்றுள்ளார். இதில் அனிருத் தனது இசை கச்சேரி பணிகளை முடித்து விட்டு நாடு திரும்பிவிட்டார்.

ஆனால், இன்னும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நாடு திரும்பவில்லையாம். மாறாக சிவகார்த்திகேயன் படத்திற்கு கதை விவாதத்தில் அவர் துபாயில் தங்கி ஈடுப்பட்டு வருகிறாராம். கதை விவாத செலவு எல்லாம் தயாரிப்பாளரை சார்ந்தது. அதனால், இந்த துபாய் செலவும் கமல் தலையில் தான் விழும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு கமல் என்ன கூற போகிறாரோ தெரியவில்லையே.

Next Story