நடிகர் தனுஷ் அடுத்ததாக அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பாடகர், தயாரிப்பாளர், பாடல் எழுத்தாளர் மற்றும் இயக்குனராக அசதி வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ராயன். தனது 50-வது திரைப்படமான ராயன் படத்தை நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருந்தார். சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: Coolie: அந்த படத்துல ‘நடிக்கல’ ஆள விடுங்க… எஸ்கேப் ஆன எஸ்.கே! .. ரொம்ப மாறிட்டாரு!…
100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, தமிழ் சினிமாவில் தற்போது ஒரு டஜன் திரைப்படங்களை கையில் வைத்துக் கொண்டு பிஸியாக வலம் வருகின்றார் நடிகர் தனுஷ். அடுத்தடுத்து தனது படத்தின் அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இயக்குனராக அவதாரம் எடுத்து தொடர்ந்து படங்களை இயக்கி வரும் நடிகர் தனுஷ் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். அதை தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்று தான் வெளியானது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது.
இது இல்லாமல் ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் டிசம்பர் கடைசியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கு அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகின்றார் என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அடுத்தடுத்து இயக்குனர்களை கமிட் செய்து வைத்திருக்கும் நடிகர் தனுஷ் எந்த இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: அவருக்கு ஒரு ‘குறும்படம்’ போடுங்க… விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் கோரிக்கை!
அது மட்டும் கோலிவுட் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக அமரன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கின்றார் என்று கூறப்பட்டு வந்தது. அதேபோல் இன்று படம் தொடர்பான அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதன்படி நடிகர் தனுஷ் தனது 55 வது திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றது.
இன்று படத்தின் பூஜை தொடங்கி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அமரன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தனுசுடன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…