தொடர் தோல்விகளால் துவண்ட லைகா... ரஜினி, அஜீத் செய்த அந்த விஷயம்...!
லைகாவின் சமீபத்திய படங்கள் பலவும் சொதப்பி வருகின்றன. லால் சலாம், பொன்னியின் செல்வன் 2, சந்திரமுகி 2, ராம் சேது, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், இந்தியன் 2 என பல படங்கள் தோல்வியைத் தழுவின.
இந்த நிலையில் ரஜினியின் வேட்டையன், அஜீத்தின் விடாமுயற்சி என இரு படங்கள் தான் பாக்கி. இந்தப் படங்கள் கைகொடுத்தால் தான் உண்டு. தொடர் தோல்விகளால் சுருண்டு கிடந்த லைகாவைத் தூக்கி விடுவது இந்தப் படங்களாகத் தான் இருக்கும் என்றே தெரிகிறது. இதற்காக ரஜினி, அஜீத் இருவரும் தங்களது சம்பளத்தையும் கணிசமாகக் குறைத்துள்ளார்கள்.
ரஜினி வழக்கமாக வாங்கும் சம்பளம் 200 கோடி வரை சம்பளம் பெறுவார். இந்தப் படத்திற்காக 125 கோடியாகக் குறைத்துக் கொண்டாராம். அதே போல அஜீத் 100 கோடி வரை இந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் ஆனதாகவும் பேசப்பட்டது. அதன்பிறகு தான் இந்தப் படத்திற்கு 75 கோடியாகக் குறைத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினி 73 வயதானாலும் இன்னும் அதே கெத்து, கம்பீரத்துடன் சினிமாவில் வலம் வருவது பலருக்கும் ஆச்சரியத்தைத் தருகிறது. ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படம் வேட்டையன். இந்தப் படத்துடன் சூர்யா நடிக்கும் கங்குவா படமும் ரிலீஸாகிறது. இந்த இரு படங்களும் அக்டோபர் 10ல் வெளியாகிறது.
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறையும் வருவதால் ரசிகர்களும், பொதுமக்களும் அப்போது படத்திற்கு கூட்டம் கூட்டமாக வர வாய்ப்பு உள்ளது. அதனால் தான் அந்த நேரத்தில் திட்டமிட்டு படத்தை வெளியிடுகிறார்கள் என்றே தெரிகிறது. வழக்கம்போல ரஜினி படத்தில் அமிதாப் பச்சம், பகத் பாசில், ராணா இணைவதால் பான் இண்டியா படமாக வந்துள்ளது.
இதையும் படிங்க... சிவாஜி படங்களுடன் ஒன்றல்ல… ரெண்டல்ல… 33 முறை மோதிய ரஜினி… துரைக்கு தில்ல பாருங்க…
ஜெயிலர் படம் போல படுமாஸாக வந்து அசால்டாக 600 கோடி வசூலைத் தட்டித் தூக்கும் என்றே தெரிகிறது. அதே போல கங்குவா படம் சூர்யா, சிறுத்தை சிவா காம்போ வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடைசியாக ரஜினியை வைத்து அவர் இயக்கிய அண்ணாத்தே படம் எதிர்பார்த்த அளவில் வசூலைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.