ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படமும், சூர்யா நடிக்கும் கங்குவா படமும் ஒரே தேதியில் அதாவது அக்டோபர் 10ல் வருகிறது. இதுவரை ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் கங்குவா தேதியை அறிவித்ததும் திடீரென ரஜினி படத்துக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதன் காரணம் என்ன? ரஜினி செய்த வேலை தானா? இதற்கு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தரும் பதில் இதுதான்.
ரஜினிகாந்த் இயமலைக்குப் போகும்போது அங்கிருந்த சாதுக்களை சந்திக்கிறாரு. ‘இப்போ என்ன படம் நடிக்கிறீங்க’ன்னு கேட்குறாங்க. ‘இப்போ வந்து கூலி படத்துக்கு சூட்டிங் போகப்போறேன்’னு சொல்றாரு. ‘அப்புறம் வேட்டையன்னு ஒரு படம் பண்ணிக்கிட்டு இருக்கேன்’கறாரு. ‘அது எப்போ ரிலீஸ் ஆகும்’னு கேட்கும்போது ‘அக்டோபர் 10’னு சொல்லிடறாரு.
ரஜினிகாந்தைப் பொருத்த வரை சில விஷயங்கள் அவருக்குத் தோன்றினா உடனே சொல்லிடுவாரு. அது சக்சஸ் ஆகிடும். படையப்பா, அண்ணாமலை படங்களுக்கு கதை எல்லாம் ஓகே. ஆனா படத்துக்கு டைட்டில் யாராலும் சொல்ல முடியல. யோசிக்கிறாங்க. அப்போ ரஜினி வந்ததும் சொன்ன டைட்டில் தான் அந்தப் படங்கள். அது இரண்டுமே மெகா ஹிட்.
இதற்கிடையில் கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரஜினி சார் படம் வந்தால் நாங்க போட்டியாக எங்கப் படத்தை விட மாட்டோம். அது ஒரு விஷப்பரீட்சை என்று சொல்லியிருக்கிறார்.
இப்போ கங்குவா படத்துக்கு ரிலீஸ் தேதி அக்டோபர் 10ன்னு அறிவிச்சாச்சு. 350 கோடில தயாராகிருக்கு. பெரிய அளவில் புரொமோஷன் பண்ணப் போறாங்க. ஆனா இந்த நேரத்துல வேட்டையன் படத்துக்கும் அதே தேதி தான் ரிலீஸ்னு அறிவிச்சிருக்காங்க.
இந்தத் தேதியில லைகாவே ஒதுங்கிட்டாங்க. சூர்யாவுக்கு எதிரா ரஜினி தான் களம் இறங்குறாரான்னு ஒரு கேள்வி உலா வருது. அந்த வகையில் இதுல என்ன உண்மைன்னு சொல்றேன்.
1988ல் ரஜினி ரொம்ப பீட்ல இருக்காரு. அப்போ கதாசிரியர் பஞ்சு அருணாசலத்துக்கு பண நெருக்கடி. அதை அறிந்த ரஜினி பிசியா இருந்தாலும் அவங்களுக்கு 12 நாள் கால்ஷீட் கொடுக்காரு. அப்படி உருவானது தான் குரு சிஷ்யன். படம் செம மாஸ்.
அதே போல தேவர் பிலிம்ஸ் இரண்டா பிரியுது. மகன், மருமகன் என்று. அப்போ அன்னை பூமி படத்தை 3டில எடுக்கிறாங்க. விஜயகாந்த் படம் பெரிய நஷ்டம். உடனே அவரோட மகன் தண்டாயுதபாணிக்கு எடுத்துக் கொடுத்த படம் தான் தர்மத்தின் தலைவன். அப்படி தயாரிப்பாளர்கள் கஷ்டப்படும்போது உதவி செய்தவர் தான் ரஜினிகாந்த்.
அதனால அவரு எந்த விதத்திலும் இன்னொரு தயாரிப்பாளருக்கு தன்னால நஷ்டம் வரணும்னு நினைக்க மாட்டாரு. அப்படி இருக்கும்போது இந்தத் தேதியை சொன்னது வேணா ரஜினியா இருக்கலாம். ஆனா முடிவு பண்ண வேண்டிய பொறுப்பு தயாரிப்பு தரப்பு தான்.
படத்துல ரிட்டயர்டு ஆன என்கவுண்டர் போலீஸ் ஆபீசர் ரஜினி. அமிதாப், பகத்பாசில், ராணான்னு பலரும் நடித்ததால இது ஒரு பாண் இண்டியா படம். ஆனா புரொமோஷன் இல்லை இன்று தான் படத்தின் ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பும் வந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…