தர்மத்தின் பக்கம் நின்று ஜெயித்த ரஜினிகாந்த்...விஜயகாந்த்...படங்கள் - ஒரு பார்வை
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்...தருமம் மறுபடியும் வெல்லும்" என்ற பாடலை பாஞ்சாலி சபதத்திற்காக மகாகவி பாரதியார் எழுதியிருப்பார். இது உண்மையிலும் உண்மை. நிஜவாழ்க்கையில் மட்டும் தானா? இல்லை தமிழ்த்திரையுலகிலும் இந்த உண்மை நடந்துள்ளது.
அதன்படி பார்த்தால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களிலும், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் படங்களிலும் பெரும்பாலும் தர்மங்களை அடிப்படையாகக் கொண்டு படத்தின் பெயர்கள் வந்துவிட்டன. இவை அனைத்தும் சூப்பர்ஹிட் தான். அவற்றைப் பற்றி பார்ப்போம்.
தங்கமகனும், கருப்பு நிலாவும் தர்மத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அவர்கள் நடித்த படங்களில் பெரும்பாலானவை தர்மமாகிய பெயரையும் சேர்த்தே வருகின்றன.
இவர்ளுக்குள் என்ன பொருத்தம் என்றால் இருவரும் தர்மங்களை அடிப்படையாகக் கொண்டு பல படங்களில் முத்திரை பதித்துள்ளனர்.
முதலில் ரஜினியை எடுத்துக் கொண்டால் தர்மத்தின் தலைவன், தர்மயுத்தம், தர்மதுரை ஆகிய படங்கள் உள்ளன. விஜயகாந்துக்கு தர்ம தேவதை, தர்மம் வெல்லும், தர்மா, தர்மபுரி ஆகிய படங்கள் உள்ளன.
தர்மத்தின் தலைவன்
1988ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம். ரஜினிகாந்த், பிரபு, குஷ்பூ, சுஹாசினி, சார்லி, நாசர், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் காதில் தேன் பாய்ச்சுகின்றன.
முத்தமிழ் கவியே வருக, ஒத்தடி ஒத்தடி, தென்மதுரை வைகை நதி, யாரு யாரு இந்த கிழவன் யாரு, வெள்ளி மணி கிண்ணத்திலே ஆகிய பாடல்கள் உள்ளன.
தர்மா
1998ல் கேயார் இயக்கிய படம். விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார், ஜெய்சங்கர், தலைவாசல் விஜய், மன்சூர் அலிகான், கசான்கான், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
தர்மயுத்தம்
1979ல் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, தேங்காய் சீனிவாசன், சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.சி.சக்தி இயக்கிய படம்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. ஆகாய கங்கை, ஒரு தங்க ரதத்தில் ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன.
தர்மதேவதை
1986ல் வெளியான இந்தப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். விஜயகாந்த், ராதிகா, பல்லவி, டிஸ்கோசாந்தி, சரத்பாபு, டெல்லி கணேஷ், நம்பியார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ரவீந்திரன் இசை அமைத்துள்ளார். படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது.
தர்மதுரை
1991ல் ரஜினியின் நடிப்பில் அட்டகாசமாக வெளியான படம் தர்மதுரை. ராஜசேகர் இயக்கியுள்ளார். ரஜினியுடன் கௌதமி, மது, நிழல்கள் ரவி, சரண்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ரஜினியின் ஸ்டைலும், தத்துவ பஞ்ச் வசனங்களும், திரைக்கதையும், இளையராஜாவின் இன்னிசை படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. ஆணென்ன பெண்ணென்ன, மாசி மாசம் ஆளான பொண்ணு, ஒண்ணு ரெண்டு, சந்தைக்கு வந்த கிளி ஆகிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.