Categories: Cinema History latest news

35 ஆயிரம் சம்பளம் கேட்ட ரஜினி… ‘அடப்பாவி உன் வேல்யூ உனக்கே தெரியலையா’ன்னு சொன்ன தயாரிப்பாளர்

வில்லனாக நடிக்கும் ஒரு நடிகருக்கும் திரையரங்களில் கைதட்டல் காதைக் கிழிக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. அப்படி ஒரு சம்பவம் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நடந்தது.

காயத்ரி படம் தான் அதுரு. தயாரிப்பாளர் பஞ்சுவோட பார்ட்னர்ஷிப் தயாரித்தது. படம் நாயகிக்கான கதை. ஹீரோ ஜெய்சங்கர். ஹீரோயின் ஸ்ரீதேவி. ஆனால் திரையரங்குகளில் படம் ஓடினால் ரஜினிக்குத் தான் கைதட்டல் விழுகிறது. அப்படி ஒரு அனாயச நடிப்பை படத்தில் நடித்திருப்பார் சூப்பர்ஸ்டார்.

சண்டைக்காட்சிகளில் வில்லனான ரஜினி, ஜெய்சங்கரை அடிக்கும்போதும் கைதட்டல் தான். விசில் பறக்கிறது. அதே போல காயத்ரி படத்துக்கு 1 மாதத்திற்கு முன்பு ரிலீஸ் ஆன படம் புவனா ஒரு கேள்விக்குறி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு. அந்தக் காலகட்டத்தில் ஹீரோவாக சிவக்குமார் தான் நடிப்பார். ரஜினி வில்லன். ஆனால் இங்கு மாறி விடுகிறது. ரஜினி ஹீரோ.

சிவக்குமார் வில்லன். இதற்கு காரணம் பஞ்சு தான். குடும்பம் குடும்பமாகக் கொண்டாடிய படம் இது. படத்தின் கதாநாயகி சுமித்ரா. ரஜினியின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். மறைந்த காதலியின் நினைவாக அவர் வைத்திருக்கும் தாடி தான் படத்தின் பிளஸ் பாயிண்ட். காதல் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தியிருப்பார்.

Priya

அதே போல ப்ரியா படத்துக்கு ரஜினி சம்பளமாக 35 ஆயிரம் கேட்டாராம். அதைக் கேட்டதும் தயாரிப்பாளர் பஞ்சு அடப்பாவி உன் வேல்யூ உனக்குத் தெரியலையே… வெளியே என்ன மார்க்கெட்னு உனக்கு சொல்றதுக்கு ஆள் இல்லையா? நான் உனக்கு 1 லட்சம் தர்றேன். அது ராசி இருக்காது. 1 லட்சத்து 10 ஆயிரம் தர்றேன் என அப்போதே ரஜினிக்கு உற்சாகம் ஊட்டியவர் என்றால் அது அவர் தான்.

1978ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் ப்ரியா. சுஜாதா கதை எழுதியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். ரஜினி, ஸ்ரீதேவி, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ பாடல் ஒன்று, அக்கரைச் சீமை அழகினிலே, டார்லிங் டார்லிங், என் உயிர் நீதானே. ஸ்ரீராமனின் ஸ்ரீதேவி ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப் படத்தில் தான் உள்ளன.

 

 

 

 

Published by
sankaran v