கமல் ரசிகனுக்கு ரஜினி வாங்கிக் கொடுத்த ஆட்டோ..ஆண்டு தோறும் மாலை அணிவிக்க வரும் ரசிகர்

by sankaran v |
கமல் ரசிகனுக்கு ரஜினி வாங்கிக் கொடுத்த ஆட்டோ..ஆண்டு தோறும் மாலை அணிவிக்க வரும் ரசிகர்
X

baasha

அண்ணாமலை படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என தேவா சொல்கிறார்.

பாலசந்தருடன் ரஜினியும் சேர்ந்து என்னை, வாருங்கள். வாருங்கள் என வரவேற்றார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் தான் இந்தப்படத்திற்கு இசை அமைக்கப் போகிறீர்கள் என்றதும் அண்ணாமலை படத்தின் கதையைச் சொன்னார்கள்.

எனக்கு மகிழ்ச்சியில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல, நான் கனவு கண்ட வாய்ப்பு. தானாக வந்து சேர்ந்ததை நினைத்துப் புல்லரித்துப் போனேன்.

Deva

சுமார் 40 டியூன்களுக்கு மேல் போட்டு எடுத்துக் கொண்டு போய் ரஜினியிடம் போட்டுக் காட்டினேன். அதில் அவர் தான் டியூன்களை செலக்ட் செய்தார். அத்தனையும் சூப்பர் ஹிட். தேவா என்ற பெயர் அன்று முதல் தமிழ் ரசிகர்கள் எல்லோருக்கும் போய்ச் சேர்ந்தது.

முத்து படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். பாடல்களும் ஹிட் ஆனது. ரகுமானுக்கு என்னை விட கமர்ஷியல் வேல்யூ அதிகம். அதனால் இனி ரஜினி ரகுமானைத் தான் சிபாரிசு செய்வார். தேவாவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றார்கள். கணிப்பு பொய்த்தது. அருணாச்சலம் பட வாய்ப்பு கிடைத்தது.

Arunachalam rajni

பாடல் கம்போசிங்கிற்கு அவர் வீட்டிற்கு வருவதாகச் சொன்னேன். வேண்டாம் வேண்டாம்...உங்கள் பிரசாத் கம்போசிங் ரூமிற்கே நான் வருகிறேன். அதுதான் உங்கள் தொழிலுக்கு மரியாதை கொடுத்தது போலாகும்.

அது போல கம்போஸிங்கிற்காக என் அருகில் அமர்ந்தார். நான் ஆர்மோனியத்தில் டியூன் போடத் தொடங்கினேன். எனக்கு முழங்கால் வலிக்கிறது. உங்கள் பக்கமாகக் கொஞ்சம் காலை நீட்டிக்கொள்ளலாமா என கேட்டார்.

Annamalai

என்னிடம் அவர் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் சூப்பர் ஸ்டார். நான் சாதாரணமானவன். இருந்தும் அவர் அப்படி அனுமதி கேட்ட பண்பு என்னை வியக்க வைத்தது.

பாட்ஷா படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்தார். ஒருநாள் அவர் ரெக்கார்டிங் ரூமிற்கு வந்துவிட்டு திரும்புகையில் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. டிரைவர் கையில் மாலையோடு வந்தார்.

ரஜினி வெளியே வந்ததும் அவருக்கு மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்கினார். நான் ரஜினியிடம் தனியாக யார் அது? உங்கள் ரசிகரா என்று கேட்டேன். இல்லை அவன் கமல் ரசிகன் என்றார் ரஜினி.

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஆமாம். நான் சினிமா வாய்ப்புத் தேடுகையில் என் அறையின் பக்கத்து அறையில் தங்கி இருந்தான். அப்போது அவன் கமல் ரசிகன். வாடகை ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டான்.

முள்ளும் மலரும் படத்தில் நடித்த போது அதில் வந்த சம்பளத்தில் அவனுக்கு ஆட்டோ வாங்கிக் கொடுத்தேன். அந்த நன்றி கடனுக்காக பிறந்தநாள் தோறும் எனக்கு மாலை அணிவித்து விட்டுச்செல்வான் என்றார். நான் அசந்துவிட்டேன் என்றார் தேவா.

Next Story