ரஜினி பேசிய முதல் பஞ்ச் டயலாக்... அப்பவே இப்படி பேசியிருக்காரா தலைவரு?!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே அவரது ஸ்டைலும், ஸ்பீடான டயாலாக்கும் மட்டுமல்ல. படத்தில் பஞ்ச் டயலாக்கும் உண்டு.
ரசிகர்களின் பலத்த கைதட்டல்களும் ஆரவாரமும் இவரது பஞ்சுக்கு எப்போதுமே உண்டு.
அந்த வகையில் சூப்பர்ஸ்டார் வயசானாலும் இன்னும் அதே நடிப்பு, ஸ்டைலோடும், லுக்கோடும் இருக்காருன்னா அதுல இந்தப் பஞ்ச் டயலாக்கும் ஒண்ணு.
நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி. கண்ணா பன்னிங்க தான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளா தான் வரும். ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் முடிக்கிறான்.
நான் எப்ப வருவேன். எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன். கதம் கதம். முடிஞ்சது முடிஞ்சிப் போச்சுன்னு அவர் பேசிய பஞ்ச் டயலாக்குகள் ரொம்ப பிரபலமானவை.
ரஜினிகாந்த் பேசியதிலேயே எது முதல் பஞ்ச் டயலாக்கு தெரியுமா? 1977ம் ஆண்டு ரஜினிகாந்த், சிவக்குமார், சுமித்ரா நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி. எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார்.
பஞ்சு அருணாச்சலம் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இருந்தார். இப்படத்தில் சிவக்குமார் பெண்களை ஆசை காட்டி மோசம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஒரு காட்சியில் சிவக்குமார் பெண் வீட்டிற்குள் நுழைவார்.
அப்போது ரஜினிகாந்த் 'கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குத் தண்ணி குடிச்சாலும் அது செரிக்காது. வயித்தக் கிழிச்சிட்டு வெளிய வந்துரும்' என ஒரு பஞ்ச் டயலாக் கூறுவார். இது தான் ரஜினி பேசிய முதல் பஞ்ச் வசனம்.
இந்தப் படத்திற்கு இசை அமைத்து இருந்தவர் இளையராஜா. விழியில் மலர்ந்தது, ராஜா என்பார் மந்திரி, பூந்தென்றலே நல்ல நேரம் ஆகிய பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன. அதிலும் ராஜா என்பார் மந்திரி என்பார் பாடல் முழுக்க முழுக்க தத்துவம் தான். ரஜினியின் நடிப்பு ரொம்பவே அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.