More
Categories: Cinema History Cinema News latest news

மீண்டும் களமிறங்கும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் 2023ஐத் தெறிக்க விடுமா?

2023ம் ஆண்டில் ரஜினி, கமல், அஜீத், விஜய்யின் படங்கள் பட்டையைக் கிளப்ப தயாராகி வருகின்றன. பொங்கலுக்கு தலயுடன் தளபதி மோதுகிறார்.

ரஜினி கமல் என்ற மூத்த ஜாம்பவான்களின் படம் வெளியாக உள்ள தேதி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. என்றாலும் ரசிகர் களுக்கு 2023ம் ஆண்டு விருந்து தான். எது எப்படியோ தமிழ்சினிமாவின் ஆயுசு கெட்டி தான். ஆண்டுதோறும் படங்களின் எண்ணிக்கைக்கு மட்டும் குறைவே இல்லை.

Advertising
Advertising

ஒரு புறம் புதுமுகம் படையெடுக்க பழைய முகங்களும் அவ்வப்போது எட்டிப்பார்க்க முன்னணி ஹீரோக்கள் ஆண்டுக்கு ஒன்றாவது தந்து விடும் முனைப்பில் இருக்கின்றனர். இனி அந்த வரிசையில் வர உள்ள 4 பெரும் ஹீரோக்களின் படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஜெய்லர்

Jailer Rajni

இது ரஜினியின் 169வது படம். இது ஒரு ஆக்ஷன் காமெடி படம். கலாநிதி மாறன் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். ரஜினிகாந்த், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படம் அடுத்தாண்டு வெளியாகிறது. அனிருத் ரவிச்சந்திரன் இசை அமைக்கிறார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இயக்குனர் சிவாவின் அண்ணாத்த படத்தின் வெற்றிக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இவர் கோலமாவு கோகிலா, பீஸ்ட், டாக்டர் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2

லைகா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்திற்கான கதையை ஷங்கர், ஜெயமோகன், லட்சுமி சரவணகுமார், கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர். அனிருத் இசை அமைத்து வருகிறார்.

கமல், சித்தார்த், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு கமலுக்கு வெளியாக உள்ள படம் என்பதால் அதிகளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியன் முதல் பாகம் படமும் சக்கை போடு போட்ட படம். தவிர அரசியலிலும் நுழைந்துள்ளதால் படத்தில் அரசியல் களம் எப்படி இருக்கும் என்றும் ஏக எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நிலவுகின்றன.

துணிவு

Thunivu Ajith

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளியாக உள்ள படம் துணிவு. இது அஜீத்துக்கு 61வது படம். சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், அஜய், சிபிசக்கரவர்த்தி, மகாநதி சங்கர், பகவதி பெருமாள் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப்படம் வரும் 2023 பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணியானது நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜீத்திற்கு கடைசியாக வெளியான வலிமை படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதால் இந்தப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

வாரிசு

Varisu Vijay

பாட்டு, பைட், சோகம், சென்டிமென்ட், லவ் என பலதர ரசனை கலந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றும் அது ரசிகர்களுக்கு சிறந்த மசாலா படமாக இருக்க வேண்டும் என்றும் எண்ணத்தில் எடுக்கப்பட்ட படம் வாரிசு.

விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்தப்படத்தை வம்சி பைடிபைலி இயக்கி வருகிறார். தமன் இசை அமைத்துள்ளார். ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகிபாபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராமன், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா சண்முகநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். விஜய்க்கு இது 66வது படம். விஜய்க்கு கடைசியாக நடித்த பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் இந்தப்படத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார்.

2023 பொங்கலைக் குறி வைத்து படம் தயாராகி வருகிறது.

Published by
sankaran v