பாதியில் நின்று போன ரஜினி-கமல் படங்கள் - ஒரு பார்வை

by sankaran v |
பாதியில் நின்று போன ரஜினி-கமல் படங்கள் - ஒரு பார்வை
X

Marutha Nayagam Kamal

பிரபல நடிகர்களின் படங்களில் பாதியில் நின்று போய் பல படங்கள் ரிலீஸ் ஆக முடியாமல் பெட்டியிலேயே முடங்கி விடுகின்றன. இவற்றில் நாம் எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பற்றி முந்தைய பதிவில் பார்த்து விட்டோம். இனி ரஜினி, கமலின் படங்கள் பற்றி பார்க்கலாம். படங்கள் பாதியில் நின்று போனதற்கான காரணம் என்ன? என்று ஆராய்ந்தால் பல காரணங்கள் இருக்கும்.

ஜக்குபாய்

jakkubhai rajni

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 5 படங்கள் பாதியிலேயே நின்று விட்டன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2004ல் ஜக்குபாய் என்ற பெயரில் படம் வெளியாவதாக இருந்தது. இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ராணி முகர்ஜி, ஜோதிகா என பெரும் நட்சத்திரங்கள் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைப்பதாக இருந்தது. பின்னர் காலதாமதம் ஆனதால் ரஜினியும் சந்திரமுகி படத்தில் நடிக்க இருந்தார். பின்னர் இந்தப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் சரத்குமார், ஸ்ரேயா சரண், ஸ்ரீஷா, கவுண்டமணி ஆகியோரை வைத்து இந்தப்படத்தை 2010ல் எடுத்து வெளியிட்டார்.

துருவநட்சத்திரம்

துருவநட்சத்திரம் என்ற படத்தை முதலில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாக இருந்தது. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இந்தப்படத்தை இயக்குவதாகவும் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் துருவநட்சத்திரம் படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியானது.

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ரஜினிக்கு பக்கிரி என்ற கதையைச் சொன்னார். இந்தப்படத்தில் நடிக்க ரஜினி மறுத்து விட்டார். காரணம் படத்தில் உள்ள அரசியல் தானாம்.

கமல்ஹாசனுக்கும் பல படங்கள் பெட்டியிலேயே முடங்கி உள்ளன. அதிவீரபாண்டியன், பொன்னியின் செல்வன், கண்டேன் சீதையை, லேடீஸ் ஒன்லி, அமர காவியம், மருதநாயகம், லண்டனில் காமேஸ்வரன் ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். நாம் ஒரு சில படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

மருதநாயகம்

உலக நாயகன் கமலின் பல படங்கள் பாதியில் நின்று போய் உள்ளன. நமக்கு தெரிந்த வரை பெரிய அளவில் அவர் பிரம்மாண்டமாக எடுத்த மருதநாயகம் படம் தான் தெரியும். இந்தப்படத்தின் ட்ரெய்லருக்கான தொடக்கவிழாவில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் அம்மையார் வந்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

இந்தப்படத்திற்கு கதை, தயாரிப்பு, இயக்கம் என எல்லாமே கமல்ஹாசன் தான். படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ஒரு பாடலும் இணையதளத்தில் வெளியாகிவிட்டது. பட்ஜெட் பற்றாக்குறையால் படம் தொடங்கப்படாமல் உள்ளதாக கமல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
கமலின் கனவு படமான இது துவக்கத்திலேயே நின்று போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது.

சபாஷ் நாயுடு

sabash Naidu Kamal

தசாவதாரம் படத்தில் ஒரு கேரக்டர் பல்ராம் நாயுடு. இவர் பேசும் போது சிரிப்பு வந்து விடும். வித்தியாசமான நகைச்சுவை கேரக்டர். கிட்டத்தட்ட டி.எஸ்.பாலையாவின் சாயலில் குரல் தொனி நமக்கு கேட்கும். ஆனால் பல்ராம் நாயுடு ஒரு கம்பீரமான காவல் துறை அதிகாரி கேரக்டரில் வருவார். ரசிகர்களின் ரசனைக்கு உரிய இந்த கேரக்டர் படம் முழுவதும் வந்தால் நல்லா இருக்குமே என்ற ஆவலில் தொடங்கப்பட்ட படம் தான் சபாஷ் நாயுடு.

கமல் எழுதி இயக்கும் நகைச்சுவை படம். சுருதிஹாசன், ரம்யா கிருஷ்ணனும் இந்தப்படத்தில் நடித்து வந்தனர். இளையராஜாவின் இசை அமைப்பில் உருவான இந்தப்படத்திற்கான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டனர். என்ன காரணமோ தெரியவில்லை. படம் இன்னும் வெளியாகவில்லை.

சபாஷ்நாயுடு படத்தைப் பற்றித் தெரியும். அது என்ன என்று பார்த்தால் இன்னும் அதற்கான விடை தெரியவில்லை.

இந்தியன் 2

ஷங்கரின் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படத்தின் 2ம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வந்தது. இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. பின்னர் படப்பிடிப்பில் ஏற்பட்ட கிரேன் விழுந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்துக்கும், இயக்குனருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் தொடங்கப்படாமலே உள்ளது. தற்போது கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் 2படத்தில் நடித்து வருகிறார். இது முடிந்தபின்னர் இந்தியன் 2 துவங்கும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

Next Story