ரஜினி படத்தில் பட்டையைக் கிளப்பிய டாப் 10 வில்லன்கள்... கெத்து காட்டி டஃப் கொடுத்தது அவரா?
ரஜினியே ஆரம்பகாலப் படங்களில் வில்லனாகத் தான் நடித்தார். கமலுக்கே டஃப் கொடுப்பார். அதன்பிறகு ஹீரோவாகி கலக்கி வருகிறார். அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில வில்லன்கள் நடித்துள்ளார்கள். அவர்களில் டாப் 10 யார்னு பார்க்கலாமா...
ஜெயிலர் படத்தில் விநாயகம் என்ற வில்லன் நடிப்பில் தூள் கிளப்பி இருப்பார். ரஜினிக்கே இவர் நடிப்பு கண்டு மிகவும் பிடித்து விட்டதாம். டிரெண்ட்டிங்கில் உள்ள வில்லனும் இவர் தான்.
நெப்போலியன் எஜமான் படத்தில் மட்டும் தான் வில்லனாக நடித்து இருப்பார். பயங்கரமா ஸ்கோர் பண்ணியிருப்பாங்க. வல்லவராயன் என்ற பிடிவாதமான கேரக்டரில் நடித்து இருப்பார்.
நிழல்கள் ரவி ரஜினிக்கு வில்லனாக பல படங்களில் நடித்திருப்பார். ஆனால் மாப்பிள்ளை, தர்மதுரை, அண்ணாமலை, உழைப்பாளி, அருணாச்சலம் படங்களில் அவரது வில்லத்தனம் செம மாஸாக இருக்கும்.
டைகர் பிரபாகரன் ரஜினியோடு 5 படங்களில் தான் நடித்துள்ளார். காயத்ரி, தாய்மீது சத்தியம், அண்ணாமலை, பாண்டியன், முத்து ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
சத்யராஜ் ரஜினிக்கு டஃப் கொடுத்த வில்லன். மிஸ்டர் பாரத் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்து ரஜினியை வேணும்னா என் படத்துல வில்லனா நடிக்கச் சொல்லுன்னு சொன்னாராம். எவ்வளவு கெத்து பாருங்க... மூன்று முகம், பாயும் புலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
ஜெய்சங்கர் 16 படங்களுக்கும் மேல வில்லனா நடித்துள்ளார். முரட்டுக்காளை, தனிக்காட்டு ராஜா, படிக்காதவன், மாவீரன், பாயும்புலி, துடிக்கும் கரங்கள், தாய்வீடு, மாப்பிள்ளை படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் இறப்பதற்கு முன் ரஜினியுடன் தான் வில்லனாக நடித்துள்ளார். அது தான் முரட்டுக்காளை. காயத்ரி படத்தில் ரஜினி வில்லன். ஜெய்சங்கர் ஹீரோ.
ராதாரவி 13 படங்களில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். சிவப்பு சூரியன், சிவா, ராஜாதி ராஜா, பணக்காரன், உழைப்பாளி, முத்து என பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் செந்தாமரை ரஜினியுடன் 18 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நான் மகான் அல்ல, நான் வாழ வைப்பேன், நான் அடிமை இல்லை, கழுகு, ஸ்ரீராகவேந்திரர், கவிக்குயில், பொல்லாதவன், பணக்காரன், படிக்காதவன் என பல படங்களில் நடித்துள்ளார். வில்லனாக நடித்தது உன் கண்ணில் நீர் வழிந்தால், அதிசய பிறவி, மூன்று முகம் தான் நல்ல பிக்கப். அதிலும் ஏகாம்பரமாக வந்த மூன்று முகம் செம மாஸ்.
படையப்பாவில் நீலாம்பரியாக வந்து வில்லியாகக் கலக்கியவர் ரம்யா கிருஷ்ணன். சிறப்பான நடிப்பைக் கொடுத்துக் கலக்கி இருந்தார். இதற்கு முன் விஜயசாந்தி மன்னன் படத்தில் நடித்து இருப்பார்.
ரகுவரன் தான் ரஜினிக்கு நிகராக டஃப் கொடுத்த வில்லன். அதுல பாட்ஷா தான் கெத்து. மார்க் அண்டனியாக வந்து அசத்துவார். 9 படங்களில் நடித்துள்ளார். கெஸ்ட்ரோலில் சிவாஜியில் வருவார். மிஸ்டர்பாரத், ஊர்க்காவலன், மனிதன், சிவா, ராஜா சின்ன ரோஜா, அருணாச்சலம், முத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார்.