ரஜினியுடன் போட்டி போட்டு மண்ணைக் கவ்விய படங்கள்... அதே கதி தான் சூர்யாவுக்குமா?
சூப்பர்ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே அது மாஸ் தான். பிற நடிகர்கள் அவரது படங்கள் ரிலீஸ் என்றால் போட்டி போடத் தயங்குவர். அதனால் ரஜினி படம் வரும்போது ரிலீஸ் செய்ய மாட்டார்கள். அந்த வகையில் இதற்கு முன் சில படங்கள் ரஜினி படத்துடன் மோதியுள்ளன. அதன் கதி என்னன்னனு பார்க்கலாம். ரஜினியுடன் மோதிய நடிகர்களின் கடைசி படங்கள் பற்றியும் அது வெற்றியா, தோல்வியா என்பது பற்றியும் பார்ப்போம்.
நடிகர் பாக்கியராஜ் ரஜினியுடன் கடைசியாக மோதிய படம் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. இது பாட்ஷாவுடன் மோதியது. அதே நாள் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் படமும் மோதியது. இருவரது படங்களும் தோல்வியைத் தழுவின.
ரஜினியின் முத்து படத்துடன் சரத்குமாரின் ரகசிய போலீஸ் மோதியது. ஆனால் அதுவும் படுதோல்வி தான். ரஜினியின் அருணாச்சலம் படத்துடன் ராம்கியின் தாலி புதுசு படம் மோதியது. இது சுமாரான வெற்றி தான்.
அதே போல ரஜினியின் படையப்பா படத்துடன் விஜயகாந்த், சூர்யா நடித்த பெரியண்ணா படமும் மோதியது. இது பி அண்ட் சி ஏரியாக்களில் நல்ல வரவேற்பு. இருந்தாலும் படையப்பாவை மிஞ்ச முடியவில்லை. அதே படத்துடன் டி.ராஜேந்தரின் மோனிஷா என் மோனாலிசா படமும் ரிலீஸ். ஆனால் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
ரஜினியின் பாபா படம் வெளியாகி சில நாள்களில் பார்த்திபன் நடித்த இவண் படமும் வெளியானது. இருவரது படங்களும் தோல்வி. அதே போல ரஜினியின் சந்திரமுகியுடன் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ரிலீஸ். கமல் படம் படுதோல்வி. அப்போது விஜய் நடித்த சச்சின் படமும் ரிலீஸ். அதுவும் தோல்வி தான்.
ரஜினியின் குசேலன் படத்தையொட்டி மைக்மோகன் நடித்த சுட்டபழம் ரிலீஸ். இது படுதோல்வி. அதன்பிறகு ரஜினியின் பேட்ட படத்துடன் அஜீத்தின் விஸ்வாசம் மோதியது. இதுல உலகளவில் ரஜினி மாஸ் என்றாலும் தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் தான் அதிகம். ரஜினியின் தர்பார் படத்துடன் தனுஷின் பட்டாஸ் ரிலீஸ். இதுல தனுஷ் படம் தோல்வி.
ரஜினியின் அண்ணாத்த படத்துடன் விஷாலின் எனிமி ரிலீஸ். இதுவும் படுதோல்வி. மொத்தத்தில் ரஜினியுடன் போட்டியிட்ட கடைசி படங்களில் எந்த நடிகருமே வெற்றி பெறவில்லை. இதுல அஜித் மட்டுமே தப்பி இருக்கிறார். சமீபத்தில் வேட்டையன், கங்குவா ஒரே நாளில் ரிலீஸ் ஆவதாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது. அதனால் இந்த வரிசையில் சூர்யா வெற்றி பெறுவாரா அல்லது ரஜினியுடன் போட்டியிட்ட மற்ற நடிகர்களைப் போல தோல்வியைத் தழுவுவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.