Cinema History
கமல் மட்டும் அன்று அப்படி நினைச்சிருந்தா நான் இன்று நடிச்சிருக்கவே முடியாது… ரஜினி ஓபன் டாக்
கமலும், ரஜினியும் .இணைபிரியா நண்பர்கள். இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு உருவாகக் காரணமே அவர்களின் புரிதல் தான். ஒருவருக் கொருவர் தொழிலில் தான் போட்டியே தவிர நிஜத்தில் நட்பு பாராட்டத் தயங்க மாட்டார்கள். 2009ல் நடந்தது கமலின் பொன்விழா ஆண்டு;. ரஜினி பேசியது இதுதான்.
கமலும் நானும் அபூர்வ ராகங்கள் படத்துக்குப் பிறகு 3 படங்கள் பண்ணிவிட்டோம். அப்போதே கமல் பெரிய பிஸ்தா. அவர் சொன்னா என்ன வேணாலும் கேட்பாங்க. கமல் நினைத்திருந்தால் ரஜினிக்கு வாய்ப்பு கொடுக்காதீங்க.
ரஜினியைக் கிட்ட சேர்க்காதீங்க. அப்படின்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் படவாய்ப்பு இல்லாம பெங்களூருவுக்குப் போயிருப்பேன். இது சத்தியமான உண்மை. ஆனா கமல் அப்படி நினைக்கவே இல்லை. அதுதான் ஒரு கலைஞனுக்கான அற்புதமான குணம் என்றாராம் ரஜினி.
அவர்கள் படம் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. என் காட்சி முடிந்ததும் செட்டை விட்டு வேகமாக ஓடுவேன். இதைக் கே.பாலசந்தரும் பார்த்துக்கிட்டே இருந்தார். அப்படி ஒருமுறை ஓடும்போது பின்னால் இருந்து ஒரு கை பிடித்ததாம். ‘எங்கடா போற? தம் அடிக்கப் போறீயா?’ன்னு பாலசந்தர் கேட்டாராம். ரஜினியும் ‘ஆமா’ என்று சொல்ல, ‘அங்க கமல்னு ஒருத்தன் நடிச்சிக்கிட்டு இருக்கான். போய் அவன் நடிப்பைப் பாரு’ன்னு அவர் சொன்னாராம்.
உண்மையிலேயே அந்த செட்டுக்குள்ளப் போய் உட்கார்ந்தேன். கமல் நடிப்பைப் பார்த்தேன். எல்லாமே சிங்கிள் டேக். ஒரு வசனத்தை எப்படி மேனரிசத்தோடு பேசணும்? ஒரு வசனத்தை எப்படி உள்வாங்கணும்? எப்படி எக்ஸ்பிரஷன் கொடுக்கணும்? உட்கார்ந்து பார்க்க ஆரம்பிச்சேன்.
கமலைப் பார்த்துத் தான் நான் நடிக்க ஆரம்பிச்சேன்னு சொல்றதுக்கு எனக்கு எந்தவிதமான கவுரவக் குறைச்சலும் கிடையாது. சினிமாவில் அவர் அண்ணன். பாலசந்தர் அன்று அப்படி ஒரு வார்த்தை சொல்லலைன்னா இன்னைக்கு 5…. 6 டேக் கூட நான் வாங்கலாம்னு ரஜினி சொன்னாராம்.
மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.