Cinema News
தலைவருதான் நிரந்தரம்.. வேட்டையன் படத்தால் கேரளாவில் மாஸ் காட்டும் ரஜினி
ஆயுத பூஜையை ஒட்டி ரிலீஸ் ஆன திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினி, மஞ்சு வாரியர் ,பகத் பாசில், துஷாரா விஜயன், அசல் கோலார், ரக்சன், ரானா ட, ரித்திகா சிங் என முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர்.
ஜெயிலர் படத்தை போலவே வேட்டையன் திரைப்படமும் ரசிகர்களை கவரவில்லை. அதற்கு காரணம் வேட்டையன் திரைப்படத்தில் பாதி கதை துஷாரா விஜயனை மையப்படுத்தியே அமைந்தது தான். ரஜினி படம் என்றாலே சூப்பர் ஸ்டார் மாஸ் படத்தில் இருக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் விரும்புவார்கள்.
ஆனால் வேட்டையன் திரைப்படத்திலும் துஷாரா விஜயனை மையப்படுத்தியே படம் முழுவதும் நகர்ந்ததால் ரசிகர்களை கவரவில்லை. அதைப்போல இரண்டாம் பாதியில் ராணா டகுபதி வரும் காட்சிகள் மிகவும் சொதப்பல் ஆகவே இருந்தது. இந்த இரு காரணங்களினால் தான் வேட்டையன் திரைப்படம் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
அது மட்டுமல்ல படத்தின் வசூலும் 300 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகின. அதுவும் திடீர் மழை காரணமாக வசூலிலும் சரிவை தழுவியது. இருந்தாலும் 300 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூலாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் ரிலீசான படங்களில் விஜய் நடித்த கோட் திரைப்படம் தான் அதிக வசூல் பெற்ற திரைப்படமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் கேரளாவில் ரிலீஸ் ஆகி கேரளா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. அங்கு வேட்டையன் திரைப்படம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
அதாவது கேரளாவில் ரிலீசான தமிழ் படங்களில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக வேட்டையன் திரைப்படம் அமைந்திருக்கிறது. அங்கு வேட்டையன் திரைப்படத்தின் மொத்த வசூல் 16.8 கோடி என தகவல் வெளியாகியிருக்கிறது.