Connect with us
Mohan, Rajni

Cinema History

ரஜினியுடன் 19 முறை மோதிய மோகனின் படங்கள்!.. அதிக படங்களில் வெற்றி பெற்றது யார் தெரியுமா?..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுடன் மைக் மோகன் படங்கள் இதுவரை 19 படங்கள் மோதியுள்ளன. என்ன என்ன படங்கள் எல்லாம் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது? யாருடைய படங்கள் அதிகமாக வெற்றி அடைந்தது என்று பார்ப்போம்.

பொல்லாதவன் – மூடுபனி

1980 தீபாவளி அன்று ரஜினிக்கு பொல்லாதவன் படமும், மோகனுக்கு மூடுபனி படமும் வெளியானது. பொல்லாதவன் படம் செம மாஸ் ஹிட்டானது. 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அதே நேரம் மூடுபனி படம் தியேட்டரில் 200 நாள்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. இளையராஜாவுக்கு இது 100வது படம். அதனால் பாடல்கள் எல்லாமே செம மாஸ். அதிலும் என் இனிய பொன் நிலாவே பாடல் சூப்பர் ஹிட். இந்த மோதலில் இரண்டு படங்களுமே வெற்றி என்றாலும் மோகனின் மூடுபனி தான் அதிக நாள்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளது.

முரட்டுக்காளை – நெஞ்சத்தைக் கிள்ளாதே

அடுத்ததாக 1980 டிசம்பரில் ரஜினியின் முரட்டுக்காளையும், மோகனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படமும் வெளியானது. இவை இரண்டுமே ஒரு வார இடைவெளியில் தான் வெளியானது. இவற்றில் மோகனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் மோகனுடன் பிரதாப், சுஹாசினி இணைந்து நடித்தனர். மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் படம் தியேட்டரில் மட்டுமே ஒரு வருடத்தையும் தாண்டி ஓடியது. முரட்டுக்காளை படம் 150 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. 2 படங்களுமே வெற்றி என்றாலும் மோகனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் தான் அதிக நாள்கள் ஓடி வெற்றி வாகை சூடியுள்ளது.

தனிக்காட்டு ராஜா – பயணங்கள் முடிவதில்லை

1982 பிப்ரவரியில் ரஜினியின் தனிக்காட்டு ராஜா படமும், மோகனின் பயணங்கள் முடிவதில்லை படமும் வெளியானது. மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் ஒரு வருடத்தைக் கடந்து ஓடி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இதற்கு மற்றொரு காரணம் இசைஞானி இளையராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்கள்.

அடுத்து வந்த தனிக்காட்டு ராஜா படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்து இருந்தனர். ஆனால் இந்தப் படம் 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இப்போதும் அதிக நாள்கள் ஓடிய வகையில் மோகனின் படம் தான் வெற்றி பெற்றுள்ளது.

எங்கேயோ கேட்ட குரல் – தீராத விளையாட்டு பிள்ளை

அடுத்து 1982 ஆகஸ்ட் 14ல் ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல் படமும், மோகனின் தீராத விளையாட்டு பிள்ளை படமும் ரிலீஸானது. ரஜினி, ராதா, அம்பிகா நடித்த எங்கேயோ கேட்ட குரல் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 100 நாள்கள் ஓடியது. கன்னடம், தெலுங்கிலும் ரீமேக் ஆனது. அதே சமயம் மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளை படமும் வெற்றி பெற்றது. அதனால் இரண்டு படமுமே வெற்றி தான்.

மூன்று முகம் – கோபுரங்கள் சாய்வதில்லை

1982 அக்டோபரில் ரஜினியின் மூன்று முகம் படமும், மோகனின் கோபுரங்கள் சாய்வதில்லை படமும் வெளியானது. ரஜினியின் மூன்று முகம் படம் 250 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. ரஜினியை மாஸான ஆக்ஷன் ஹீரோவாகவும், சூப்பர்ஸ்டாராகவும் மாற்றிய படங்களில் இது மிகவும் முக்கியமானது.

அதே சமயம் மோகன், ராதா, சுஹாசினி நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் கன்னடம், தெலுங்கு, இந்தியிலும் ரீமேக் ஆனது. இந்த 2 படங்களில் ரஜினியின் மூன்று முகம் தான் செம மாஸ் ஹிட்டானது.

தங்கமகன் – மனைவி சொல்லே மந்திரம் 

1983, தீபாவளிக்கு ரஜினியின் தங்கமகன் படமும், மோகனுக்கு மனைவி சொல்லே மந்திரம் என்ற படமும் ரிலீஸானது. ரஜினி, பூர்ணிமா ஜெயராம் நடித்த தங்கமகன் படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 200 நாள்களைக் கடந்து வெற்றி பெற்றது.

மோகன், நளினி, பாண்டியன் நடித்த மனைவி சொல்லே மந்திரம் படமும் ஓரளவு வெற்றி பெற்றது. என்றாலும் தங்கமகன் தான் முதலிடம் பிடித்தது.

நான் மகான் அல்ல – விதி

1984 பொங்கலுக்கு ரஜினியின் நான் மகான் அல்ல படமும், மோகனுக்கு விதி மற்றும் குவா குவா வாத்துக்கள் என்ற 2 படங்களும் ரிலீஸானது. ரஜினியின் படம் சூப்பர்ஹிட்டானது. 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. மோகன், பூர்ணிமா ஜெயராம் நடித்த விதி படத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. 500 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. குவா குவா வாத்துக்கள் படத்தில் மோகன் கெஸ்ட் ரோலில் தான் நடித்தார். இவற்றில் மோகனின் விதி தான் வெற்றி பெற்றது.

தம்பிக்கு எந்த ஊரு – நான் பாடும் பாடல் 

1984 தமிழ்ப்புத்தாண்டு அன்று ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படமும், மோகனின் நான் பாடும் பாடலும் வெளியானது. ரஜினி, மாதவி, சுலக்ஷனா நடித்த தம்பிக்கு எந்த ஊரு படம் சூப்பர்ஹிட்டானது. 150 நாள்களைக் கடந்து வெற்றி பெற்றது. மோகன், சிவகுமார் நடித்த நான் பாடும் பாடல் படம் சுமாராகப் போனது. இவற்றில் தம்பிக்கு எந்த ஊரு படம் தான் சூப்பர்ஹிட்.

அன்புள்ள ரஜினிகாந்த் – நிரபராதி

1984 ஆகஸ்ட்டில் ரஜினியின் அன்புள்ள ரஜினிகாந்த் படமும், மோகனுக்கு நிரபராதி படமும் வெளியானது. ரஜினி, மீனா நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் சுமாரான வெற்றியைப் பெற்றது. அதே சமயம் மோகன், மாதவி நடித்த நிரபராதி படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த மோதலில் 2 படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

நல்லவனுக்கு நல்லவன் – ஓ மானே மானே

அடுத்து 1984, தீபாவளிக்கு ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் படமும், மோகனுக்கு ஓ மானே மானே படமும், ஓசை படமும் ரிலீஸானது. இவற்றில் ரஜினி, ராதிகா நடித்த நல்லவனுக்கு நல்லவன் படம் தான் செம மாஸ். 150 நாள்களுக்கு மேல் ஓடியது. மோகனின் 2 படங்களும் வெற்றி பெற்றாலும் ரஜினியின் படம் தான் அதிக நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.

நான் சிகப்பு மனிதன் – உதயகீதம்

1985 தமிழ்ப்புத்தாண்டு அன்று மோகனுக்கு உதயகீதம், பிள்ளை நிலா, தெய்வப்பிறவி என 3 படங்கள் ரிலீஸானது. ரஜினிக்கு நான் சிகப்பு மனிதன் படமும் ரிலீஸானது. இவற்றில் மோகன், ரேவதி நடித்த உதயகீதம் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இது வெள்ளிவிழா படம். இளையராஜாவின் இசையில் 300வது படம். பாடல்கள் எல்லாமே ஹிட். அடுத்து வந்த தெய்வப்பிறவி, பிள்ளை நிலா படங்களும் வெற்றி பெற்றன.

ரஜினி, பாக்யராஜ், அம்பிகா நடித்த நான் சிகப்பு மனிதன் படத்திற்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. இவற்றில் மோகனின் உதயகீதம் படம் தான் அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்தது.

ஸ்ரீராகவேந்திரா – இதயகோயில்

IK SR

1985 செப்டம்பரில் ரஜினிக்கு ஸ்ரீராகவேந்திரா படமும், மோகனுக்கு இதயகோயில் படமும் ரிலீஸானது. ரஜினியின் 100வது படம் ஸ்ரீராகவேந்திரா. எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மோகன், ராதா, அம்பிகா நடித்த இதயகோயில் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 150 நாள்களைக் கடந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மோகன் தான் வெற்றியைப் பெறுகிறார்.

மிஸ்டர் பாரத் – டிசம்பர் பூக்கள்

1986 பொங்கல் அன்று ரஜினியின் மிஸ்டர் பாரத் படமும், மோகனின் டிசம்பர் பூக்கள் படமும் ரிலீஸானது. ரஜினி, சத்யராஜ், அம்பிகா நடித்த மிஸ்டர் பாரத் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. டிசம்பர் பூக்கள் படமும் வெற்றி பெற்றது. 2 படங்களுமே வெற்றி பெற்றது.

நான் அடிமை இல்லை – உயிரே உனக்காக

அடுத்ததாக 1986 மார்ச்சில் ரஜினியின் நான் அடிமை இல்லை படமும் மோகனின் உயிரே உனக்காக படமும் வெளியானது. ரஜினி, ஸ்ரீதேவி நடித்த நான் அடிமை இல்லை படம் சுமாராக ஓடியது. மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக படம் சூப்பர்ஹிட்டானது.

கோடை மழை – மெல்லத்திறந்தது கதவு 

1986 செப்டம்பரில் ரஜினியின் கோடை மழை படமும், மோகனின் மெல்லத்திறந்தது கதவு படமும் ரிலீஸானது. மோகன், ராதா, அமலா நடித்த மெல்லத் திறந்தது கதவு படம் சக்கை போடு போட்டது. இளையராஜா, எம்எஸ்வியின் இசையில் பாடல்கள் செம. ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த கோடை மழை சரியாக ஓடவில்லை.

வேலைக்காரன் – ரெட்டைவால் குருவி

1987 பிப்ரவரியில் ரஜினிக்கு வேலைக்காரன் படமும், மோகனுக்கு ரெட்டைவால் குருவி படமும் ரிலீஸானது. மோகன், ராதிகா நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர்ஹிட். பாடல்கள் எல்லாம் செம மாஸ். ரஜினி, அமலா நடிப்பில் வெளியான வேலைக்காரன் படம் 150 நாள்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. ரஜினி தான் இதுல வின்னர்.

ஊர்க்காவலன் – தீர்த்தக்கரையினிலே 

1987 செப்டம்பரில் ரஜினிக்கு ஊர் காவலன் படமும், மோகனுக்கு கிருஷ்ணன் வந்தான், தீர்த்தக்கரையினிலே என 2 படங்களும் ரிலீஸானது. மோகன், சிவாஜி, ரேகா நடிப்பில் கிருஷ்ணன் வந்தான் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினி, ராதிகா நடித்த ஊர்க்காவலன் படம் 100 நாள்கள் ஓடியது. தீர்த்தக்கரையினிலே படமும் வெற்றி தான். என்றாலும் ரஜினி தான் இங்கு வின்னர்.

குசேலன் – சுட்டபழம்

கடைசியாக 2008ம் ஆண்டில் ரஜினியின் குசேலன் படமும், மோகனின் சுட்டபழம் படமும் ரிலீஸானது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை. பிளாப் ஆனது. ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்த குசேலன் படமும் பிளாப்.

காயத்ரி – கோகிலா

1977 அக்டோபரில் ரஜினியின் காயத்ரி படமும், மோகன், கமல் நடித்த கோகிலா படமும் ரிலீஸானது. ரஜினி, ஸ்ரீதேவி, ஜெய்சங்கர் நடித்த காயத்ரி பிளாப். கோகிலா ஹிட். இது கன்னட படமானாலும், தமிழகத்திலும் 100 நாள்களைக் கடந்து வெற்றி பெற்றது. இதில் கமல் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top