25 முறை ரஜினியுடன் மோதிய பாக்கியராஜ் படங்கள்!... அடிச்சி தூக்கி அதிக முறை வெற்றி பெற்றது யாரு?..

by sankaran v |   ( Updated:2024-04-19 13:26:32  )
Rajni vs Packiyaraj1
X

Rajni vs Packiyaraj1

80களில் நிறைய தடவை வெற்றிப்படங்களைத் தந்து ரஜினி, கமலுக்கே டஃப் கொடுத்தவர் தான் பாக்கியராஜ். இவரது படம் ரஜினியுடன் மோதிக்கொண்டால் எப்படி இருக்கும்? ஜெயித்தது யாருன்னு பார்க்கலாமா...

1979ல் ரஜினிக்கு நினைத்தாலே இனிக்கும், பாக்கியராஜிக்கு புதிய வார்ப்புகள் ரிலீஸ். இதுல இருவரும் வின்னர். அதே ஆண்டில் ரஜினிக்கு ஆறிலிருந்து அறுபது வரை, பாக்கியராஜிக்கு கன்னிப்பருவத்திலே ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினியின் அன்னை ஓர் ஆலயம், பாக்கியராஜிக்கு சுவர் இல்லாத சித்திரங்கள் ரிலீஸ். இதுல இருவரும் வின்னர். 1980ல் ரஜினியின் அன்புக்கு நான் அடிமை, பாக்கியராஜிக்கு பாமா ருக்மணி ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.

இதையும் படிங்க... யப்பா… அவரை ஆட வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு… டான்ஸ் மாஸ்டரையே கதிகலங்க வைத்த அந்த நடிகர் யார்?

அதே ஆண்டில் ரஜினியின் காளி, பாக்கியராஜின் ஒரு கை ஓசை ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினிக்கு பொல்லாதவன், பாக்கியராஜிக்கு குமரிப் பெண்ணின் உள்ளத்திலே ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1981ல் ரஜினியின் தீ, பாக்கியராஜின் மௌனகீதங்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். வெள்ளி விழா கொண்டாடிய படம் இது.

அதே ஆண்டில் ரஜினியின் கழுகு, பாக்கியராஜின் இன்று போய் நாளை வா ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினிpயின் தில்லு முல்லு, பாக்கியராஜின் விடியும் வரை காத்திரு ரிலீஸ். இதுல இருவரும் வின்னர்.

அதே ஆண்டில் ரஜினியின் ராணுவ வீரன், பாக்கியராஜின் அந்த 7 நாட்கள் ரிலீஸ். இதுல பாக்கியராஜ் படம் வெள்ளி விழா. அதனால் அவர் தான் வின்னர். 1982ல் ரஜினியின் ரங்கா, பாக்கியராஜின் தூறல் நின்னு போச்சு ரிலீஸ். பாக்கியராஜ் படம் 300 நாள்கள் ஓடியது. அதனால அவர் தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினியின் எங்கேயோ கேட்ட குரல், பாக்கியராஜின் பொய் சாட்சி ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.

அதே ஆண்டில் ரஜினியின் மூன்று முகம், பாக்கியராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1983ல் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு, ரஜினியின் அடுத்த வாரிசு ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். அவரது படம் வெள்ளி விழா கொண்டாடியது.

1984ல் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன், பாக்கியராஜின் தாவணிக்கனவுகள் ரிலீஸ். இதுல இருவரும் வின்னர். 1985ல் ரஜினியின் படிக்காதவன், பாக்கியராஜின் சின்ன வீடு ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1988ல் ரஜினியின் தர்மத்தின் தலைவன், பாக்கியராஜின் இது நம்ம ஆளு ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1989ல் ரஜினியின் சிவா, பாக்கியராஜின் என் ரத்தத்தின் ரத்தமே ரிலீஸ். இதுல இரண்டுமே பிளாப்.

இதையும் படிங்க... எங்க போனாலும் முட்டுக்கட்டையா? விடாமுயற்சியை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’க்கும் வந்த சிக்கல்

1989ல் ரஜினியின் மாப்பிள்ளை, பாக்கியராஜின் ஆரிரோ ஆரீராரோ ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 1991ல் ரஜினியின் நாட்டுக்கு ஒரு நல்லவன், பாக்கியராஜின் ருத்ரா ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்ன. 1992ல் ரஜினியின் மன்னன், பாக்கியராஜின் சுந்தர காண்டம் ரிலீஸ். இதல ரஜினி தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினியின் அண்ணாமலை, பாக்கியராஜின் அம்மா வந்தாச்சு ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்..அவரது படம் வெள்ளி விழா.

அதே ஆண்டில் ரஜினிக்கு பாண்டியன், பாக்கியராஜிக்கு ராசுக்குட்டி ரிலீஸ். இதுல பாக்கியராஜ் தான் வின்னர். 1995ல் ரஜினிக்கு பாட்ஷா, பாக்கியராஜிக்கு ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர். 2023ல் ரஜினிக்கு ஜெயிலர், பாக்கியராஜிக்கு 3.6.9 படம் ரிலீஸ். இதுல ரஜினி தான் வின்னர்.

Next Story