17 முறை ரஜினியுடன் மோதிய சரத்குமார் படங்கள்... அதிக படங்களில் ஜெயித்தது யாருன்னு தெரியுமா?

Sarathkumar, Rajni
90களில் சரத்குமார் நிறைய வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கே டஃப் கொடுக்கும் வகையில் சில படங்களில் நடித்துள்ளார். பார்ப்போமா...
1991ல் ரஜினியின் தர்மதுரை, சரத்குமாரின் தங்கமான தங்கச்சி படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி படம் 175 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அதனால் அவர் தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினிக்கு நாட்டுக்கு ஒரு நல்லவன், சரத்குமாருக்கு வசந்தகால பறவை படங்கள் ரிலீஸ். இதுல சரத்குமார் தான் வின்னர். 1992ல் ரஜினியின் மன்னன், சரத்குமாரின் இளவரசன் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி படம் 175 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அதனால் அவர் தான் வின்னர்.

Annamalai, Samundi
அதே ஆண்டில் ரஜினியின் அண்ணாமலை படமும், சரத்குமாரின் இது தான்டா சட்டம் படமும் ரிலீஸ். இதுல ரஜினி படம் 175 நாள்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. அதனால் அவர் தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினியின் பாண்டியன், சரத்குமாரின் தாய்மொழி மற்றும் சாமுண்டி படங்கள் ரிலீஸ். இவற்றில் சரத்குமாரின் சாமுண்டி வெற்றி. அதனால் அவர் தான் வின்னர்.
1993ல் ரஜினியின் எஜமான், சரத்குமாரின் தசரதன் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி படம் 175 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அதனால் அவர் தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினியின் உழைப்பாளி, சரத்குமாரின் முன் அறிவிப்பு மற்றும் பேண்டு மாஸ்டர் படங்கள் ரிலீஸ். உழைப்பாளி, பேண்டு மாஸ்டர் படங்கள் வெற்றி. அதே ஆண்டில் ரஜினியின் வள்ளி, சரத்குமாரின் மூன்றாவது கண் படங்கள் ரிலீஸ். இதுல சரத்குமார் தான் வின்னர்.
1994ல் ரஜினியின் வீரா, சரத்குமாரின் இந்து படங்கள் ரிலீஸ். இதுல ரெண்டும் வெற்றி. 1995ல் ரஜினியின் பாட்ஷா, சரத்குமாரின் வேலுச்சாமி படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி படம் 1 வருடத்திற்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அதனால் அவர் தான் வின்னர். அதே ஆண்டில் ரஜினியின் முத்து, சரத்குமாரின் ரகசிய போலீஸ் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி படம் 175 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அதனால் அவர் தான் வின்னர்.

Rajasthan, Padayappa
1997 ரஜினியின் அருணாச்சலம், சரத்குமாரின் சூர்ய வம்சம் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினியின் படம் 175 நாள்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. அதே நேரம் சரத்குமார் படமும் 175 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. பல விருதுகளையும் வென்றது. 1999ல் ரஜினியின் படையப்பா, சரத்குமாரின் ராஜஸ்தான் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினி படம் 200 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. அதனால் அவர் தான் வின்னர்.
2002ல் ரஜினியின் பாபா, சரத்குமாரின் தென்காசிப்பட்டணம் படங்கள் ரிலீஸ். இதுல சரத்குமார் தான்0 வின்னர். 2005ல் ரஜினியின் சந்திரமுகி, கெஸ்ட் ரோலில் சரத்குமார் நடித்த ஜித்தன் படங்கள் ரிலீஸ். இதுல ரஜினிதான் வின்னர். 2020ல் ரஜினியின் தர்பார், சரத்குமாரின் வானம் கொட்டட்டும் படங்கள் ரிலீஸ். இதுல சரத்குமார் தான் வின்னர்.