சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே தமிழ்த்திரை உலகில் ரசிகர்களுக்கு ஒரு ஜெர்க் வரும். அவர் நடந்தாலும், பேசினாலும், நடித்தாலும், ஆடினாலும் ஒரு உற்சாகம் வந்துவிடும். அப்படி ஒரு வசீகரம் அவரிடம் உள்ளது. அது இன்று வரை குறையாமல் இருப்பது தான் ஆச்சரியம்.
Also read: நயன்தாரா விவகாரம் பற்றி எரியுற நேரத்துல தனுஷ் பாங்காக் போயிருக்காராமே… ஏன்னு தெரியுமா?
1995ம் ஆண்டு அவர் டிவி சானல் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டி நம்மையே ஆச்சரியப்படுத்துகிறது. திருவிளையாடலில் சிவாஜியிடம் நாகேஷ் கேட்பது போல எல்லாமே ஒரு வரி கேள்வி பதில் தான். கேள்விகள் படபடவென்று வர ரஜினியிடம் இருந்து பதில்கள் ‘பட் பட்’ என்று வருகிறது.
ஆன்மிகவாதியா, காந்தியவாதியா?
அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். ‘நீங்க ஆன்மிகவாதியா, காந்தியவாதியா’ன்னு கேட்குறாங்க. அதுக்கு ‘இரண்டுக்கும் ஒண்ணும் பெரிய வித்தியாசம் இல்லைங்க’ன்னு சொல்றார். அடுத்து ‘உங்களைக் கவர்ந்த அரசியல் தலைவர் யார்?’னு கேட்குறாங்க. ‘சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்வான்யூ’ என்கிறார்.
மனிதன் முட்டாளாவது எப்போ?
‘உங்களுடைய கருத்தை என்றைக்காவது மாற்றியதுண்டா?’ ‘நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி’ என்கிறார் ரஜினி. ‘தங்களை மிகவும் கவர்ந்த நடிகர் யார்?’ ‘கமல்ஹாசன்’. ‘மனிதன் முட்டாளாக ஆவது எப்போது?’ ‘தன் மீது நம்பிக்கை வைக்காமல் மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கும்போது’. இதெப்படி இருக்கு. இந்த ஒரு பதிலே போதும். ரஜினி எவ்வளவு ஷார்ப்பானவர் என்பது தெரிந்து விடுகிறது அல்லவா.
மிகச்சிறந்த மனிதர்
அடுத்தும் கேள்வி தொடர்கிறது. பணம் வரும்போது மனிதன் எதை மறைக்கிறான்? உண்மையை மறைக்கிறான். பணத்தை மறைக்கிறான். ‘சோ உங்களை அடிக்கடி பாராட்டிப் பேசுகிறாரே’ எனக் கேட்கிறார்கள். அதற்கு ‘அதாங்க எனக்குப் பயமா இருக்கு. நான் அரசியலுக்கு வரலீங்க.
அதனால தான் பாராட்டிப் பேசிக்கிட்டு இருக்கார். வந்துட்டேன்னு வச்சிக்கோங்க. பீஸ் பீஸா கிழிச்சிடுவாரு. உண்மையாகவே சோ சார் சிறந்த அறிவாளி. மிகச்சிறந்த மனிதர். என்னுடைய நல்ல நண்பர்’ என்கிறார் ரஜினி.
அடுத்ததாக சிவாஜியைப் பற்றிச் சில வார்த்தைகள் எனக் கேட்க, ‘என்னை ஸ்டைல் கிங்னு சொல்வாங்க. நான் ஸ்டைல் கிங்னா சிவாஜி சார் ஸ்டைல் சக்கரவர்த்தி’ என்கிறார் சூப்பர்ஸ்டார்.
கங்குவா படத்தை…
தனுஷ் மற்றும்…
அல்லு அர்ஜுன்…
நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில்…