கடவுளுக்கு நெருக்கமாக இருந்த ரஜினிகாந்த்..! வைரலான வீடியோ… ரசிகர்கள் உற்சாகம்

Published on: March 1, 2024
Rajni 2
---Advertisement---

ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் மட்டுமல்ல. அவர் நிஜ வாழ்க்கையில் ரொம்பவே எளிமையான மனிதர். தற்போது வேட்டையன் படப்பிடிப்பு ஆந்திராவில் ஜரூராக நடந்து வருகிறது. இதற்காக ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து பிளைட்டில் எகனாமி வகுப்பில் பயணம் செய்தாராம். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் எகனாமி வகுப்பில் பயணம் செய்வதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். விமானத்தில் ரஜினிகாந்த் ஏறியதும் தங்கள் ஸ்மார்ட் போனை எடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்து போட்டோ எடுக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

அப்போது ஒரு தீவிர ரசிகர் ரஜினிகாந்துடன் சில வார்த்தைகள் பேசினாராம். தொடர்ந்து ரஜினிகாந்த், கடவுளுக்கு நான் மிகவும் நெருக்கமாக இருந்தேன் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தாராம். இந்த வீடியோவை கையெடுத்து கும்பிடுவதைப் போன்ற எமோஜியுடன் பகிர்ந்துள்ளார்.

மற்றொரு வீடியோவில் ரஜினி தனது இருக்கையில் அமர்ந்து ஏர்போட்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தாராம். அவர் எளிமையாகவும், அடக்கமாகவும் இருந்தது கண்டு பயணிகள் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தார்களாம். பல்வேறு கோணங்களில் ரஜினியை படம்பிடித்து ரசிகர்களே எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்களாம்.

Rajni
Rajni

ரஜினிகாந்த் ஜன்னலோர இருக்கைக்கு அருகே நீல நிற சட்டை மற்றும் பழுப்பு நிற பேன்ட் அணிந்து இருந்தாராம். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.  அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

ஜெய்பீம் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது. தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் இந்தப் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்தன. இதனால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப்படத்தை இயக்கியவர் ஞானவேல். அவரே ரஜினிகாந்தின் படத்தையும் இயக்கி வருவதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.